காரடையான் நோன்பு 2023: காரடையான் நோன்பு என்பது பெண்கள் வழிபட்டு கடைபிடிக்கும் நோம்பாகும். இதை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வர். இதனை சாவித்ரி நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது. சாவித்ரி காட்டில் அடை செய்து படைத்தமையால் காரடையான் நோன்பு என்று அழைக்கின்றனர். இந்த நோன்பினால் கணவனுடைய ஆயுளை அதிகரிக்கும் என ஐதீகம். கற்பில் சிறந்தவளான சாவித்திரி தன்னுடைய கணவனின் ஆயுள் காலம் முடிந்து யமதேவன் அவனுடைய உயிரைப் பரித்துச் சென்ற போதிலும், யமனுடனிமிருந்து மீட்டு வந்தாள் என்று நம்பப்படுகிறது. சாவித்ரி ஆனிமாத அமாவாசையிலிருந்து மூன்று நாட்கள் விரதம் மேற்கொண்டாள். இந்த காலத்தினை சாவித்ரி விரத கல்பம் என்கின்றனர்.
திரியுமத்சேனன் மன்னனின் மகன் சத்யவான். அசுபதி மன்னின் மகள் சாவித்திரி. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சாவித்திரி கவுரி விரதத்தினை மேற்கொண்டிருந்தாள். அந்த விரதக் காலத்திலேயே சத்யவான் காட்டில் இறந்தார். தான் மேற்கொண்ட கவுரி விரதத்தினை முடிக்க மண்ணால் செய்த வடையை செய்து வழிபட்டாள். விரதம் பூர்த்தியானது. அதன் பின்பு யமதர்மனிடம் வேண்டி தன்னுடைய கணவனை மீட்டாள்.
மேலும் படிக்க | தினசரி ராசிப்பலன் - இன்று அதிஷ்டம் பெறப்போகும் ராசிகள்!
பூஜை செய்யும் முறை
நோன்பு நாளில், பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து தலைக்கு குளிக்க வேண்டும். வீட்டு வாசலிலும் பூஜையறையிலும் கோலமிட வேண்டும். அதன் மீது ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அதன் மீது நுனி வாழை இலையை வைத்து, இரண்டு அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும். இலையில், வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழங்களும் வைக்க வேண்டும். அதன் மீது நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும்.
பின்னர் அந்த அடையை நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு தாலிச்சரடையும் நோன்புச் சரடையும் கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டும். அதேபோல காரடையான் நோன்பு அன்று சொல்ல வேண்டிய சில ஸ்லோகங்களை கூறி பிராத்திக்க வேண்டும்.
காரடையான் நோன்பு பூஜை செய்யவேண்டிய நேரம்
இந்த ஆண்டு மார்ச் 15 ம் தேதி புதன்கிழமை அன்று காரடையான் நோன்பு வருகிறது. அன்றைய தினம் காலை 06.29 மணி முதல் 06.47 மணி வரை வழிபாடு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | மகாலட்சுமியை வீட்டுக்கு வரவழைக்க செய்ய வேண்டிய 3 மாற்றங்கள்..! செல்வம் பெருகும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ