கணவனின் ஆயுளை நீட்டிக்கும் தீபாவளி விரதம் -ஒரே நாளில் முழு மண்ட பலனையும் பெறலாம்

Kedara Gowri Vratham | கணவனின் ஆயுளை நீட்டிக்கும் கேதாரி கௌரி விரதம் தீபாவளி ஒரே நாளில் இருந்து முழு மண்டல பலனையும் பெறலாம் என்பது தெரியுமா?. இந்த விரதத்தின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 28, 2024, 05:21 PM IST
  • கேதார கௌரி விரதம் 2024
  • 21 நாட்கள் இருக்க வேண்டும்
  • தீபாவளி நாளில் இருந்தால் முழு பலன்
கணவனின் ஆயுளை நீட்டிக்கும் தீபாவளி விரதம் -ஒரே நாளில் முழு மண்ட பலனையும் பெறலாம் title=

Kedara Gowri Vratham Tamil | அம்பாள் உமாதேவியை நினைத்து விரதம் இருப்பதே கேதார கௌரி பூஜையாகும். 21 நாட்கள் கொண்ட இந்த விரதத்தை முழு மனதோடு இருந்தால் இழந்த செல்வங்கள் எல்லாம் திரும்ப கிடைக்கும், பெண்களுக்கு நல்ல கணவர்மார்களும், புத்திர பாக்கியமும், எடுத்த காரியத்தில் வெற்றியும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த கேதார கௌரி விரதம் முழுமையாக 21 நாட்கள் இருக்க வேண்டும். அப்படி இருந்து விரத த்தை நிறைவு செய்பவர்களுக்கு நினைத்த காரியம் வெற்றி கிடைக்கும். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் கேதார கௌரி விரதம் இருக்க முடியாதவர்கள் தீபாவளி ஒரே நாளில் முழுவதும் இந்த விரதம் இருந்து பூஜை செய்தால் முழு மண்டல பலனும் கிடைக்கும். அது குறித்து விரிவாக பார்க்கலாம். 

கேதார கௌரி விரதம் வழிமுறை

புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி, ஐப்பசி அமாவாசையான தீபாவளி நாள் வரை 21 நாள்கள் கேதார கௌரி விரதம் கடைபிடிக்கப்படும். 21 நாள்களும் இந்தப் பூஜையை மேற்கொள்ள இயலாதவர்கள், பௌர்ணமிக்குப் பிறகு வரும் பிரதமை முதல் தொடங்கி அமாவாசை வரை 14 நாள்கள் செய்வது நல்லது. அதுவும் இயலாதவர்கள், தீபாவளி அன்று முழுவதும் இந்த விரதம் இருந்து முழு மண்டல பலனை பெறலாம்.

மேலும் படிக்க | தீபாவளிக்கு கண்டிப்பாக செய்ய வேண்டிய 3 பூஜைகள்... மறக்காமல் செய்தால் ஐஸ்வர்யம் அதிகரிக்கும்

கேதார கௌரி விரத பூஜை முறை

கேதார கௌரி விரதம் கடைபிடிக்கப்படும் நாளில் காலையில் இருந்து மாலை வரை விரதம் இருந்துவிட்டு மாலையில் பூஜை செய்ய வேண்டும். முதலில் தேங்காய், மாவிலை கொண்டு கலசத்தை அலங்கரித்து வைக்க வேண்டும். பூஜைக்குத் தேவையான பூ, பழம், நைவேத்தியங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும். பச்சரிசி மாவில் அதிரசம் செய்து நைவேத்தியம் செய்வது விசேஷம். ஒரு மஞ்சள் சரடில் 21 முடிச்சுகள் இட்டு, அதைக் கலசத்தில் அலங்கரித்து வைக்க வேண்டும்.

விநாயகர் பூஜையுடன் தொடக்கம்

முதலில் விநாயகர் பூஜையுடன் தொடங்க வேண்டும். மஞ்சளில் சிறு பிள்ளையார் பிடித்து, அதற்குப் பூஜை செய்ய வேண்டும். விநாயகக் கடவுளை வணங்கித் தொடங்குவதன் மூலம், பூஜை எந்தத் தடங்கலும் இல்லாமல் பலன் பூரணமாகக் கிடைக்கும். மலரும் அட்சதையும் கொண்டு விநாயகப்பெருமானின் 16 நாமங்களைச் சொல்லித் துதித்து அர்ச்சித்து, தூப தீபம் காட்ட வேண்டும். பின், விநாயகருக்கு ஏதேனும் ஒரு பழம், வெற்றிலை பாக்கு சமர்ப்பிக்க வேண்டும். பிறகு கணநாதனுக்கு கற்பூர தீபம் காட்டி வழிபட வேண்டும். 

கேதார கௌரி விரத சங்கல்பம்

பிள்ளையார் பூஜை முடிந்ததும், பிரதான கேதார கௌரி விரத சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். சங்கல்பம் என்பது ஒரு பூஜையை எங்கு, என்று, எந்த வேளையில், எதற்காகச் செய்கிறோம் என்பதைச் சொல்லி, அந்தக் காரண காரியங்கள் செவ்வனே நடக்க இறைவனைத் தொழுதுகொள்வதாகும். பொதுவாக, எந்த விரதமானாலும் அது கல்வி, செல்வம், ஆயுள், ஆரோக்கியம், புத்ர, பௌத்ர பாக்கியம், வெற்றி ஆகியன வேண்டிக்கொள்வது வழக்கம். சங்கல்பம் செய்துகொண்ட பின்பு, கலசத்துக்குப் பூஜை செய்து, பின்பு அஷ்ட திக் பாலகர்களை வணங்க வேண்டும். பின்பு, பிரதான பூஜையான சிவபெருமானை தோத்தரிக்கும் அஷ்டோத்திரங்களை வாசித்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

கேதார கௌரி பூஜை பலன்கள்

அதன்பின், கலசத்தில் சாத்தியிருக்கும் தோரணத்துக்குப் பூஜை செய்ய வேண்டும். தோரணத்திலிருக்கும் 21 முடிச்சுகளுக்கும் பூஜை செய்து, பின் அந்தத் தோரணத்தைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். பின், கலசத்துக்கு தூப தீபங்கள் காட்டி நைவேத்தியம் செய்து, கற்பூர ஆரத்திகாட்டி வணங்க வேண்டும். கேதார கௌரிவிரதம், அனைத்து நலன்களையும் அருளும் விரதம். செல்வங்கள் அனைத்தும் சேர்வதோடு, அவை நிலைத்து நிற்கவும் செய்யும் விரதம் இது.

மேலும் படிக்க | தந்தேராஸ் நன்னாளில்... குபேரரை வழிபட... செல்வத்திற்கு குறைவே இருக்காது...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News