ஜூலை மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி மழையாய் பொழியும்: உங்க ராசி என்ன

Monthly Horoscope July 2022: ஜூலை மாத ராசிப்பலனின் அடிப்படையில் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள். பண வரவு அமோகமாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 30, 2022, 12:00 PM IST
  • மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
  • ஜூலை மாதத்தில் நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த சிம்ம ராசிக்காரர்களின் வேலைகள் நடந்து முடியும்.
  • தனுசு ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தில் நிதிப் பலன்களைப் பெறலாம்.
ஜூலை மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி மழையாய் பொழியும்: உங்க ராசி என்ன  title=

ஜூலை மாத ராசிபலன் 2022: ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ராசியை மாற்றுகிறது. ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாற்றமும் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

ஜூலை மாதத்திலும் 5 பெரிய கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றுகின்றன. ஜூலை 2 ஆம் தேதி, புதன் கிரகம் மிதுன ராசியில் நுழைகிறது. இதைத் தொடர்ந்து சூரிய பகவான் ஜூலை 16 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார். இதனுடன் செவ்வாய் மற்றும் சுக்கிரனும் ஜூலை மாதத்தில் மாறுவார்கள். 

கிரகங்களின் நிலை மாற்றத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்களும், அபரிமிதமான லாபமும் கிடைக்கவுள்ளது என இந்த பதிவில் காணலாம். 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். மிதுனத்தில் இந்த காலகட்டத்தில் தொழிலில் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். திடீர் பண ஆதாயங்கள் ஏற்படும். நீங்கள் சில பெரிய பொறுப்புகளை பெறலாம்.

மேலும் படிக்க | குருவின் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி பொங்கும்

குடும்பத்திலும் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் அனுகூலமான நன்மைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி கிடைக்கும்.

சிம்மம்:

ஜூலை மாதத்தில் நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த சிம்ம ராசிக்காரர்களின் வேலைகள் நடந்து முடியும். இந்த ராசிகளின் பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். புதிய பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்படலாம். உத்தியோகத்தில் புதிய சலுகைகளைப் பெறுவீர்கள். வேலையில் மேன்மையான செய்திகள் கிடைக்கும். 

வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. 

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தில் நிதிப் பலன்களைப் பெறலாம். இந்த நேரத்தில், எதிர்பாராத இடங்களில் இருந்து பண ஆதாயங்களை பெறுவீர்கள். வருமானம் பெருகும், பணம் சம்பாதிக்கும் வழிகள் திறக்கப்படும். 

முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமாக இது இருக்கும். இந்த காலத்தில் செய்யப்படும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல பலன்களை அளிக்கும். சொத்து தகராறில் உங்களுக்கு சாதகமாக முடிவு வரும்.

இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்

ஜூலை மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் நிலை சாதகமாக இல்லை. எனவே இந்த ராசிக்கார்ரகள் இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். நோய்கள் வரலாம். பொறுமையாய் இருங்கள். வாக்குவாதங்களில் இருந்து விலகி இருங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சுக்கிரன் இந்த பாவகத்தில் இருந்தால் அரசு வேலை கட்டாயம் பெறும் ராசிக்காரர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News