Personality By Zodiac Sign: உறவை பேணுவதில் விருப்பம் இல்லாத 5 ராசிக்காரர்கள்

உறவுகள் மிகவும் நுட்பமான சரங்களால் பிணைக்கப்பட்டுள்ளன. கண்ணாடியை போன்றவை. அவை சரியாக கையாளப்படாவிட்டால், உறவில் விரிசல் ஏற்பட்டு விடும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 28, 2022, 11:17 PM IST
  • உறவுகள் மிகவும் நுட்பமான சரங்களால் பிணைக்கப்பட்டுள்ளன.
  • கண்ணாடியை போன்றவை.
  • அவை சரியாக கையாளப்படாவிட்டால், உறவில் விரிசல் ஏற்பட்டு விடும்.
Personality By Zodiac Sign: உறவை பேணுவதில் விருப்பம் இல்லாத 5 ராசிக்காரர்கள் title=

ஜோதிடத்தில், எதிர்காலம் பற்றி அறிய பல வழிகள் சொல்லப்பட்டுள்ளன. ராசியின் அடிப்படையில் ஒருவரின் இயல்பு மற்றும் எதிர்காலத்தை அறிவது இந்த வழிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு நபரின் ராசியும் அவர் பிறந்த நேரத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அந்த நபரின் எதிர்காலம் அறியப்படுகிறது. 

ஒவ்வொரு நபரின் ராசியும் வேறுபட்டது. அதன் அடிப்படையில் அவரது இயல்பு, விருப்பு வெறுப்பு போன்றவையும் வேறுபட்டதாக இருக்கும். உறவுகள் மிகவும் நுட்பமான சரங்களால் பிணைக்கப்பட்டுள்ளன. கண்ணாடியை போன்றவை. அவை சரியாக கையாளப்படாவிட்டால், உறவில் விரிசல் ஏற்பட்டு விடும். 

அத்தகைய சூழ்நிலையில், உறவுகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும். இந்த உறவுகளைப் பேணுவதில் மிகவும் பலவீனமான சில ராசிக்காரர்களைப் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொருவரின் இயல்பும் வித்தியாசமானது.  இன்று நாம் உறவில் அதிக நாட்டம் இல்லாத சில ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | Astro: ஜாதகத்தில் சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

மேஷம்

ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசிக்காரர்கள் கோபமான குணம் கொண்டர்வர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு சிறிய விஷயமும் அவர்களின் இதயத்தில் பாதிப்பை ஏற்படுகிறது, இதன் காரணமாக அவர்களால் நீண்ட காலமாக ஒரே உறவில் இருக்க முடியாது. எந்தவொரு உறவிலிருந்தும் மெதுவாக வெளியேற முயற்சிக்கிறார்கள்.

விருச்சிகம் - இந்த ராசிக்காரர்கள் உறவுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வார்கள். சில சமயங்களில் அவற்றை நிறைவேற்றவும் தங்களால் இயன்றவரை முயற்சி செய்கிறார்கள். ஆனால் விஷயம் தங்கள் கையை விட்டுப் போய்விட்டதாக அவர்கள் உணரத் தொடங்கும் போது, ​​அவர்கள் அந்த உறவை மேலும் நீட்டிக்க மாட்டார்கள். மேலும் தங்கள் துணையுடனான உறவை நீண்ட காலம் இழுக்க மாட்டார்கள். இருப்பினும், இவர்களால் தங்கள் துணையையும் அவருடன் செலவழித்த தருணங்களையும் எளிதில் மறக்க முடியாது.

கும்பம் - ஜோதிட சாஸ்திரத்தின் படி கும்ப ராசிக்காரர்கள் இயற்கையாகவே காதல் மனம் படைத்தவர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்க்கையில் ஒருமுறை அல்ல பலமுறை காதலிக்கிறார்கள். இருப்பினும், இந்த நபர்கள் நீண்ட காலமாக ஒரே உறவில் இருப்பதில்லை. இந்த இயல்பு காரணமாக, துணையுடனான முறிவும் விரைவாக நிகழ்கிறது. இந்த ராசிக்காரர்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள், இதன் காரணமாக அவர்களால் யாருடனும் நீண்ட காலம் உறவில் இருக்க முடியாது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News