புதாதித்ய - சுக்ராதித்ய யோகத்துடன் பெளர்ணமியும் சேர்ந்தால்? பணமழையில் நனையும் ராசிகள்!

Full Moon Day Lucky Zodiacs : வீட்டில் சுபிட்சம் நிலவ அன்னை லட்சுமியின் அருளைப் பெற பெளர்ணமி நாளன்று குபேரரையும் விஷ்ணுபத்னியையும் கும்பிடுங்கள்...  

Last Updated : Jun 20, 2024, 11:29 PM IST
  • வீட்டில் சுபிட்சம் நிலவ வேண்டுமா?
  • அன்னை லட்சுமியின் அருளைப் பெற பூஜை!
  • பெளர்ணமி நாளன்று செய்ய வேண்டிய வழிபாடு...
புதாதித்ய - சுக்ராதித்ய யோகத்துடன் பெளர்ணமியும் சேர்ந்தால்? பணமழையில் நனையும் ராசிகள்! title=

அன்னை லக்ஷ்மி செல்வம் மற்றும் செழுமையின் தெய்வம் என்றால், குபேரர் செல்வத்தின் இறைவன் என்று போற்றப்படுகிறார். புராணங்களில் குபேரருக்கு முக்கிய இடம் உண்டு. இலங்கையை ஆண்டு வந்த குபேரரிடம் இருந்து அவரது உறவினர் ராவணன் நாட்டை பிடுங்கிக்கொண்டார். ஆனால், அதைவிட முக்கிய பதவியை இறை அருளால் பெற்ற குபேரர் சர்வலோகங்களிலும் உள்ள செல்வத்திற்கு அதிபதியாகிவிட்டார்.

லக்ஷ்மி மற்றும் குபேரரின் மந்திரத்தை தியானம் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் தேவைப்படும் செல்வத்தையும் வெற்றியையும் அன்னை லட்சுமியும் குபேரரும் கொடுப்பார்கள் என்பது நம்பிக்கை. ஐசுவரியத்திற்கு அதிபதியான குபேரனுடன் சேர்ந்து லட்சுமி தேவியை வழிபடுவது அழியா செல்வங்களைப் பெறலாம்.  

லக்ஷ்மி குபேர் மந்திரம் சொல்லி வழிபட்டால் 16 பேறுகளையும் பெற்று வளமுடன் வாழலாம்.  ”ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீம் குபேராய - அஷ்ட-லக்ஷ்மி மம க்ரிஹே தானம் பூராய பூராய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 16 முறை சொல்லி, லட்சுமி குபேரரை வணங்கிவந்தால், பணப் பிரச்சனையே இல்லாத வாழ்க்கை அமையும். 

அதிலும், ஆனி மாத பெளர்ணமி நாளன்று அன்னை லட்சுமியை வணங்கினால், மாளாத செல்வம் வந்து சேரும். ஜூன் 22ம் நாளன்று வரும் முழு நிலவு நாளன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் கைகொடுக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | சனி வக்ரப் பெயர்ச்சியில் இருந்து தப்பிக்க இந்த பரிகாரங்களை செய்து பாருங்கள்!

நாளை உருவாகும் முழு நிலவு, சனிக்கிழமை 22 ஜூன் 2024 காலை வரை நீடிக்கும். லட்சுமி அன்னைக்கும் சுக்கிரனுக்கும் உகந்த நாளான வெள்ளிக்கிழமையன்று உருவாகும் சுக்ராதித்ய யோகம், புதாதித்ய யோகமும் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் லட்சுமி கடாட்சத்தைக்கொண்டு வந்து சேர்க்கும். யோகமான அந்த ராசிகளைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.

ரிஷபம்: பெளர்ணமி நாளன்று வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் யோகங்களால், ஒன்றன் பின் ஒன்றாக லாப வாய்ப்புகள் உங்களை மகிழ்ச்சியாக்கும். பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். ஆற்றல் நிறைந்தவராக இருப்பீர்கள். நேர்மறையாக சிந்திப்பீர்கள். வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் உருவாகும். இது நிதி நிலையை பலப்படுத்தும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

கடகம்: இனி பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு இந்த பெளர்ணமி நாளன்று செய்யும் லட்சுமி குபேர பூஜை நன்மைகளைத் தரும். வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு நாளை அருமையான நாள். லக்ஷ்மி அன்னையின் சிறப்பு அருள் பெறும் தனுசு ராசிக்காரர்கள், தடைபட்ட பணிகளை செய்து முடிப்பார்கள். வேலையில் வெற்றியடைவதால் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவடையும். மகிழ்ச்சியான தருணங்களால் வாழ்வில் வசந்தம் வீசும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சொந்த வீடு இல்லாவிட்டாலும், இருந்த இடத்தில் இருந்து பாடாய் படுத்தும் ராகு! விமோசனம் இருக்கே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News