மஹா சிவராத்திரி அன்று உருவாகும் அற்புத யோகங்கள்... பலன்களும் பரிகாரங்களும்...!

மகா சிவராத்திரி அன்று, அதன் முக்கியத்துவம் அறியாமல் செய்த பூஜைகளுக்கும் கூட அமோக பலன் கிடைக்கும் என்று திங்கள் கூறுகின்றன. அந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்றது மகா சிவராத்திரி.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 27, 2024, 12:40 PM IST
  • மாசி மாத தேய்பிறை சதுர்தசி நாளை மகா சிவராத்திரி என கூறப்படுகிறது.
  • மாதம் தோறும் அமாவாசைக்கு முந்தினம் வரும் சதுர்தசி திதி, மாத சிவராத்திரி ஆகும்.
  • சிவனுக்கு உகந்த இரவான சிவராத்திரி அன்று சிவசிவ என்று சொன்னாலே போதும்.
மஹா சிவராத்திரி அன்று உருவாகும் அற்புத யோகங்கள்... பலன்களும் பரிகாரங்களும்...! title=

மஹா சிவராத்திரி 2024: மகா சிவராத்திரி அன்று செய்யும் பூஜைக்கு, 1008 சிவராத்திரிகளில் பூஜிப்பதால் கிடைக்கும் முழு பலனும் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. அதோடு, ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருந்தாலே, 100 அஷ்ரமேத யாகம் செய்த பலன்களும், பலமுறை கங்கையில் நீராடிய பலனும் கிடைக்குமாம். மாசி மாத தேய்பிறை சதுர்தசி நாளை மகா சிவராத்திரி என கூறப்படுகிறது. மாதம் தோறும் அமாவாசைக்கு முந்தினம் வரும் சதுர்தசி திதி, மாத சிவராத்திரி ஆகும். அந்த வகையில் 2024 மார்ச் எட்டாம் தேதி அன்று மகா சிவராத்திரி தினத்தில் சிவபெருமானை வழிபட்டு, பூஜித்து, இரவு தூங்காமல் அவரை வணங்கி ஆராதனை செய்து, அருளை பெறலாம்.

சிவனுக்கு உகந்த சிவராத்திரி

சிவனுக்கு உகந்த இரவான சிவராத்திரி அன்று சிவசிவ என்று சொன்னாலே போதும், துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் ஓடிப் போகும் என்பது ஐதீகம். சிவன் லிங்கமாக உருவெடுத்து தினமே சிவராத்திரி என கூறப்படுகிறது. நமச்சிவாய என்ற மந்திரத்தை மனதில் நினைத்தாலே, வாழ்வில் எந்த பிரச்சனையும் இருக்காது. சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம் தருபவர் என்று பொருள்.

மகா சிவராத்திரி அன்று உருவாகும் யோகங்கள்

சித்தயோகம்

மார்ச் மாதம் மகா சிவராத்திரி நாளில், நள்ளிரவு 12 46 மணி முதல் இரவு 8 32 மணி வரை நீடிக்கும் சித்தயோகம், வாழ்வில் வெற்றிகளை கொடுக்கும் சிறப்பான யோகம். இந்த காலத்தில் சிவனை வழிபடுவதன் மூலம், மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி, எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும்.

சர்வார்த்த சித்தி யோகம்

சர்வாத்து சித்தி யோகம், மகா சிவராத்திரி தினத்தன்று காலை ஆறு முப்பத்தி எட்டு மணி முதல் 10 41 மணி வரை நீடிக்கும். இந்த யோகம் தடைகளை நீக்கி உங்கள் முயற்சிகள் வெற்றி அளிக்க வேண்டும். இந்த நேரத்தில் சிவ பெருமானை வணங்குவதன் மூலம், நீங்கள் சந்தித்த தடைகள் அனைத்தும் நீங்கி எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி பெரும்.

மேலும் படிக்க | Astro Traits: அறிவாற்றலை அள்ளிக் கொடுக்கும் புதனின் ஆசி பெற்ற ‘4’ ராசிகள்!

சிவயோகம்

சிவயோகம், 2024 மார்ச் எட்டாம் தேதி அதிகாலை நான்கு நாற்பத்தி ஆறு மணிக்கு தொடங்கி, நள்ளிரவு பன்னிரண்டு 40 மணிக்கு நிறைவடையும். பெருமானின் அருளை பெற, அவரை வணங்கி வழிபடுவதன் மூலம், உங்கள் மனதை வாட்டி வைந்த பிரச்சனைகள் நீங்கி, பகவான் உங்கள் மன சஞ்சலங்களை போக்குவர்.

மகா சிவராத்திரி பூஜை செய்யும் முறை

மார்ச் 8 வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரி நாளில், அதிகாலையில் எழுந்து நீராடி, சிரத்தை மிகுந்த  பக்தியுடன் சிவபெருமானுக்கு விரதம் இருக்க வேண்டும். அதன் பிறகு சுப வேளையில் பூஜையைத் தொடங்க வேண்டும். சிவனுக்கு உகந்த விலவ இலை கொண்டு அர்ச்சனை செய்வது சிறப்பு.  சிவபெருமானை முறைப்படி பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். சிவனுக்கு உரிய ஸ்தோத்திரங்களை சொல்லி வழிப்பட்டால், வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் அடையலாம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2024: பதவி உயர்வு, பணபலம் சேரக்கூடிய அதிர்ஷ்டசாலி ராசிகள் இவைதான் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News