புதன் வக்ர பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்கள் இனி லட்சாதிபதி

Mercury Retrograde 2023: புதன் பகவான் ஏப்ரல் 21 ஆம் தேதி மேஷ ராசியிலேயே வக்ர பெயர்ச்சி செய்ய உள்ளது. இதனால், சில ராசியினருக்கு தொழில், வேலை, நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 19, 2023, 12:49 PM IST
  • புதன் பகவான் மேஷ ராசியிலேயே வக்ர பெயர்ச்சி செய்ய உள்ளது.
  • சில ராசியினருக்கு தொழில், வேலை, நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
புதன் வக்ர பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்கள் இனி லட்சாதிபதி title=

புதன் வக்ர பெயர்ச்சி 2023: ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சி நடப்பது இயல்பான விஷயம் தான். ஆனால் சில கிரகங்கள் மட்டுமே அதிசாரம், வக்ர பெயர்ச்சி மேற்கொள்ளக்கூடிய கிரகங்களாக உள்ளன. பொதுவாக ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி செய்து கொண்டே இருக்கும். எனவே ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சி முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதன் பகவான் வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி மேஷ ராசியிலேயே வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால், சில ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி நிலை போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படும். எனவே புதன் வக்ர பெயர்ச்சியால் எந்தெந்த ராசியினருக்கு சிறப்பு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மேஷம்: மேஷ ராசியில் சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் புதாத்திய யோகம் உருவாகும், அத்துடன் புதனின் வக்ர நிலை மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை தரும். மேலும் தொழில், வேலையில் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கும். வேளையில் இருப்பவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வீண் செலவுகளை செய்வதை தவிர்க்கவும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். அபரிமிதமான செல்வ வளம் உண்டாகும். செயல்களில் வெற்றி உண்டாகும்.

மேலும் படிக்க | அட்சய திரிதியை இந்தாண்டு எப்போது வருது? நல்ல நேரம் எப்போது?

மிதுனம்: புதன் வக்ர பெயர்ச்சியால் தடைகள் நீங்கி வெற்றி பெற புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். கடின உழைப்பால் முன்னேற்றம் அடைவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க சாதக காலம். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்: புதன் வக்ர பெயர்ச்சி அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். தொழிலில் மகத்துவமான வெற்றி கிடைக்கும். உங்கள் வேலையில் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள். நிதி நிலைமை மேம்படும். குடும்ப வாழ்க்கையில் அன்பும், ஆதரவும் பெறுவீர்கள்.

கும்பம்: புதன் வக்ர நிலை பல விதத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு வேலை அல்லது வியாபாரத்தில் பெரிய பலன்கள் கிடைக்கும். இந்த நேரம் தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். போட்டியாளர்களை விட்டு விலகுவீர்கள். வெற்றி உங்களை வந்துசேரும்.

மீனம்: புதன் வக்ர பெயர்ச்சி மீன ராசிக்கு பல விதத்தில் நன்மைகளை தரும். தொழில், வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். கடின உழைப்புக்கு சாதகமான பலன் கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு தேடி வரும். பொருளாதார நிலை மேம்படும். ஆரோக்கியம் மேம்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பல ஆண்டுக்குப் பிறகு 2 சக்திவாய்ந்த கிரகங்களின் சேர்க்கை, இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News