துலாம் ராசியில் புதன்! இந்த 3 ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும்

Mercury Transit Good Luck: சூரியன், சுக்கிரன், நிழல் கிரகமான கேது மற்றும் எதிரியான சந்திரன் ஆகிய மூன்றும் புதன் சஞ்சாரத்தின் போது துலாம் ராசியில் இணைகின்றனர் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 25, 2022, 01:49 PM IST
  • பஞ்ச கிரஹி யோகத்தால் 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்
  • சூரியன், சுக்கிரன், கேது சந்திரன் புதன் என 5 கிரகங்களும் ஒரே ராசியில்
  • 3 ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும்
துலாம் ராசியில் புதன்! இந்த 3 ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும் title=

புதன் பெயர்ச்சி: ஜோதிடத்தில் சம கிரகமாக கருதப்படும் புதன் பெயர்ச்சி சிலருக்கு சாதகங்களையும், வேறு சிலருக்கு பாதகங்களையும் கொடுத்தால், சிலருக்கு நடுநிலையான பலன்களைக் கொடுக்கவிருக்கிறது. புதன் ஒரு தீய கிரகத்துடன் இணைந்தால், அது சாதகமற்ற விளைவுகளை உருவாக்குகிறது, சுப கிரகங்களுடன் இணைந்தால் சாதகமான விளைவுகளை உருவாக்குகிறது. 12 ராசிகளில், புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளை ஆட்சி செய்யும் புதன், நாளை தனது சஞ்சாரத்தை மாற்றுகிறார். துலாம் ராசிக்கு செல்லும் புதன் 3 ராசிகளுக்கு நன்மைகளை செய்ய இருக்கிறார். இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷடம் எங்கிருந்தாவது வந்து சேரும்.  

வேத ஜோதிடத்தின் படி, புதன் கிரகம் துலாம் ராசிக்குள் நுழையும் பெயர்ச்சி, 3 ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும்.

மேலும் படிக்க | சுக்கிரனின் மாளவ்ய யோகத்தால் தீபாவளியை ஜாலியாக கொண்டாடும் ராசிகள்

துலாம் ராசியில் புதன்
புத்திசாலித்தனம், வாய் சாதுரியம், தகவல் தொடர்பு, கணிதம், புத்திசாலித்தனம், நட்பு என பல முக்கியமான விஷயங்களுக்கு அதிபதி புதன் கிரகம். சூரியனும் சுக்கிரனும் புதனின் நண்பர்களாகக் கருதப்படுகிறார்கள். எனவே, புதன் பெயர்ச்சியின் தாக்கம், இந்தத் துறைகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து ராசிகளிலும் காணப்படும். புதள் நாளை துலாம் ராசிக்கு செல்வது, பணம் மற்றும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கவிருக்கிறது. புதன் பெயர்ச்சியால், மகிழ்ச்சிக் கடலில் நீச்சல் அடிக்கப்போகும் ராசிகள் இவை...

மிதுனம்: புதனின் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் உங்கள் பெயர்ச்சி, ஜாதகத்தின் ஐந்தாம் வீட்டில் நடக்கப் போகிறது. இது குழந்தைகள் மற்றும் உயர் கல்விக்கான இடம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் குழந்தைகளின் பக்கத்திலிருந்து நல்ல செய்திகளைப் பெறலாம்.

காதல் வாழ்க்கையும் இந்த நேரத்தில் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் வேலை தொடர்பான விஷயங்களிலும் சாதகமான வாய்ப்புகளைப் பெறலாம், இது வருமானத்தை அதிகரிக்கும். மறுபுறம், உங்கள் ராசியை புதன் ஆட்சி செய்வதால், புதனின் பெயர்ச்சி, உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் மரகதக் கல்லை அணிவது, அதிர்ஷ்டத்தைக் கூட்டிக் கொடுக்கும்.  

மேலும் படிக்க | சூரிய கிரகணம் 2022: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நினைத்தது நடக்கும் 

கடகம்: புதனின் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் உங்கள் ராசியிலிருந்து நான்காம் வீட்டில் புதன் சஞ்சரிக்கப் போகிறார். இது பொருள், மகிழ்ச்சி மற்றும் தாயின் இடம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் வேண்டிய பொருள் கிடைக்கும். தாயின் ஆதரவும் அன்பும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் ஈடுபட்டவர்களுக்கும் பல நல்ல வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன. 

சிம்மம்: புதனின் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாபாரத்திலும், தொழிலிலும் வெற்றியைத் தரும். உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் புதன் கிரகம் சஞ்சரிக்கப் போகிறது. இது வலிமை மற்றும் சகோதர சகோதரிகளின் இடம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் உங்களுக்கு தைரியமும் வலிமையும் அதிகரிக்கும். பணியிடத்தில் நல்ல வாய்ப்புகளும் உருவாகும். நன்கொடை, தர்மம் என பொதுவாழ்க்கையிலும் தீவிரமாக பங்கேற்பீர்கள். 

புதன் பெயர்ச்சிக்கு பிறகு, திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணம் கிடைக்கும். லாட்டரி மற்றும் பங்குச் சந்தைகளில் இருந்து பணம் கிடைக்கும் வாய்ப்பு உங்களுக்கு அதிகமாக இருக்கிறது.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனீஸ்வரரால் பிரச்சனை முடிந்தாலும் சிக்கலைக் கொடுக்க தயாராகிவிட்டார் புதன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News