சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் பொறந்தாச்சு.... இனி லாபம், சுகம், அதிர்ஷ்டம்

Venus Transit: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 13, 2024, 02:30 PM IST
  • கன்னி ராசிக்காரர்களுக்கு நிதிநிலை நன்றாக இருக்கும்.
  • எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு இருக்கும்.
  • பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் பொறந்தாச்சு.... இனி லாபம், சுகம், அதிர்ஷ்டம்

Venus Transit: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஜோதிட கணக்கீடுகளின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இந்த ராசி மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. ராசிகள் மட்டும் இல்லாமல் கிரகங்களின் நட்சத்திரங்களிலும் மாற்றம் ஏற்படுகின்றது. இது தவிர, உதயம், அஸ்தமனம், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. 

Add Zee News as a Preferred Source

அறிவாற்றல், பேச்சாற்றல், பணம், புகழ், செல்வம் வெற்றி ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள சுக்கிரன் பிப்ரவரி 12ஆம் தேதி தனது ராசியை மாற்றினார். சுக்கிரன் மகர ராசியில் பெயர்ச்சி ஆகியுள்ளார். அவர் மார்ச் 6ஆம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்கள் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியின் உச்சத்தை தொடுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

சுக்கிர பெயர்ச்சியால் உச்சத்தை தொடவுள்ள ராசிகள் 

மேஷம் (Aries)

சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் புரிதலும் அன்பும் அதிகமாகும். நீண்ட காலமாக பிரச்சினைகளை சந்தித்து வருபவர்கள் தற்போது அவற்றிலிருந்து நிவாரணம் பெறுவார்கள். பணவரவு அதிகமாக இருக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க | கும்பத்தில் சூரியன்: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம்...வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

சிம்மம் (Leo)

சுக்கிரன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உங்கள் நிதிநிலை மேம்படும். வாழ்க்கை துணையின் முழுமையான ஆதரவை நீங்கள் பெறுவீர்கள். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு தற்போது லாபம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

கன்னி (Virgo)

கன்னி ராசிக்காரர்களுக்கு நிதிநிலை நன்றாக இருக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு இருக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். இது முதலீடு செய்ய ஏற்ற நேரம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி வரும். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள்.

கும்பம் (Aquarius)

கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு இப்போது வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு இப்போது நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் மூலம் நல்ல செய்தியை பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | குரோதி தமிழ் புத்தாண்டு பலன்: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News