Tuesday Astrology Remedies: ஜோதிட சாஸ்திரப்படி செவ்வாய் கிரகத்தின் அதிபதி செவ்வாய் ஆகும். இந்த நாளில் பல பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. ஏனெனில் இந்த தினத்தாய் சிறப்பான தினமாக பார்க்கப்படுகிறது. எனினும் செவ்வாய்க்கிழமையில் சில விஷயங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பார்கள். அதில் பல விஷயங்கள் அடங்கும். அவற்றை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.
ஜோதிடத்தின் படி செவ்வாய்க்கிழமை (Tuesday) ஆஞ்சநேயர் மற்றும் முகருக்கும் உரிய நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் இந்த இரண்டு கடவுளையும் வழிப்படுவது சிறப்பு வாய்ந்தது. செவ்வாய் கிழமை அனுமன் சாலிசா, கந்த சஷ்டி பாராயணம் செய்வது நோய் நொடியில் இருந்து நம்மை காக்கும் என்பது ஜோதிட நம்பிக்கை.
பொதுவாக செவ்வாய்க்கிழமை பிறருக்கு பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்நாளில் யாருக்காவது கடன் கொடுத்தால் அந்த பணம் திரும்ப வராது, பல கஷ்டங்களுக்குப் பிறகு தான் திரும்பக் கிடைக்கும். மேலும் செவ்வாய்க்கிழமையன்று பணம் கொடுத்தல் வாங்குதல் போன்ற வேலையையும் தொடங்கக்கூடாது. இது தவிர, இந்த நாளில் கூர்மையான பொருட்களை வாங்கக்கூடாது. இதனால் வீட்டில் தகராறு ஏற்படலாம்.
செவ்வாய்க்கிழமை மேற்கு மற்றும் வடக்கு நோக்கி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல் செவ்வாய்க் கிழமை இருப்பவர்கள் உப்பு சாப்பிடக்கூடாது. இந்த நாளில் உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது வேலையில் தடங்களை ஏற்படுத்தலாம். எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்நாளில் அசைவ உணவுகளை சமைக்கவோ, சாப்பிடவோ கூடாது. அப்படி செய்வது வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுத்தலாம்.
செவ்வாய்க்கிழமையில் இரும்பு மற்றும் கருப்பு ஆடைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வது உங்களுக்கு அபத்தை ஏற்படுத்தலாம். இதனுடன், இந்த நாளில் எஃகு, அலுமினியம் அல்லது கூர்மையான பொருட்களை வாங்குவதையும் தவிர்க்க வேண்டாம்.
செவ்வாய்க்கிழமையில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிபடலாம். பிரம்ம முகூர்த்ததில் அதாவது அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும்.
திருமணமான பெண்கள் செவ்வாய்க்கிழமை அன்று அழகுசாதனப் பொருட்கள் வாங்குவது திருமண உறவில் சலசலப்பை ஏற்படுத்தலாம். மறுபுறம், நீங்கள் அழகுசாதனப் பொருட்களை வாங்க விரும்பினால், இதற்கு சிறந்த நாட்கள் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை என்று கருதப்படுகிறது.
முக்கியமாக செவ்வாய்க்கிழமையில் மொட்டையடிப்பது, முடி வெட்டுவது போன்றவை அசுபமாக கருதப்படுகிறது. இதற்கு புதன்கிழமை சிறந்த நாளாக கருதப்படுகிறது. மேலும் செவ்வாய்கிழமையில் நகங்களை வெட்டினால் வாழ்க்கையில் நிறைய சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம்.
செவ்வாய்கிழமை மூத்த சகோதரர்களுடன் சண்டை போடவே கூடாது, அப்படி செய்வது விபத்துகள் மற்றும் இதர பிரச்னைகள் ஏற்படுத்தக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ