சனியின் நட்சத்திர மாற்றம், அடுத்த 55 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு செல்வ செழிப்பு

Shani Vakri Gochar 2023: சனி வக்ர பெயர்ச்சி கட்டத்தில் சதய நட்சத்திரத்தில் நுழைகிறது. ஆகஸ்ட் 22 முதல், அடுத்த 56 நாட்களுக்கு, சனிபகவான் சதய நட்சத்திரத்தில் பிற்போக்கு நிலையிலேயே இருப்பார். சனியின் பிற்போக்கு சஞ்சாரம் 5 ராசிக்காரர்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மிகச் சிறந்த பலன்களைத் தரும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 23, 2023, 10:23 PM IST
  • கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள்.
  • பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் அமையும்.
  • தொழில் ரீதியாகவும், இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சனியின் நட்சத்திர மாற்றம், அடுத்த 55 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு செல்வ செழிப்பு title=

சதய நட்சத்திரத்தில் சனி வக்ர பெயர்ச்சி 2023: வேத ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகங்களில் ஒன்றாக சனி கருதப்படுகிறது. சனி சஞ்சரிக்கும் போதெல்லாம், அதன் பலன் அனைத்து ராசிகளிலும் தெரியும். அதன்படி சனி ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் சதய நட்சத்திரத்தில் வக்ர நிலையில் மட்டுமே சஞ்சரிக்கிறார். இந்த நட்சத்திரத்தில் வரும் அக்டோபர் 15 வரை சனி பிற்போக்கு நிலையில் தான் பயணம் செய்ய இருக்கிறார். எனவே சனியின் இந்த வக்ர நிலை ஐந்து ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலனைத் தரப் போகிறது. அதன்படி எந்ததெந்த ஐது ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் மிகவும் பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசியின் மீது வக்ர சனியின் பலன் எப்படி இருக்கும்
மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிலை மிகவும் பலனளிக்கப் போகிறது. இந்த நேரத்தில், மேஷ ராசிக்காரர்கள் புதிய திட்டத்தை தொடங்க நினைத்தால், 
நல்ல பலன்களைத் தரும். அதே நேரத்தில், சனி வணிகர்களுக்கும் நன்மைகளைத் தருவார். வேலை செய்பவர்களுக்கும் சனியின் சிறப்பு ஆசிகள் இருக்கப் போகின்றன. அவர்கள் முன்னேற அதிக வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

மேலும் படிக்க | நேருக்கு நேர் வரும் சூரியன் சனி: இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம், வெற்றிகள் குவியும்

ரிஷப ராசியின் மீது வக்ர சனியின் பலன் எப்படி இருக்கும்
சதய நட்சத்திரத்தில் சனி வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளது மிதுன ராசிக்காரர்களுக்கு குறிப்பாக அளவில்லா நன்மைகளை செய்யும். இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்கள் மேற்கொள்ளும் அனைத்து பயணங்களும் வெற்றியடைவதோடு சிறப்பான பலன்களையும் தரும். அதேபோல் வெளியூர் செல்ல முயற்சிப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பெரிய அளவில் வெற்றி கிடைக்கும்.

சிம்ம ராசியின் மீது வக்ர சனியின் பலன் எப்படி இருக்கும்
வக்ர சனி சிம்ம ராசிக்காரர்களின் தொழிலுக்கு பெருமை சேர்க்கும். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் தொழிலில் நல்ல வாய்ப்புகளைப் பெறப் போகிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களும் வெற்றி பெறுவார்கள். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த காரியம் இனிதே நிறைவேறும். இதனுடன் சனிபகவானின் அருளால் அதிகப் பணம் கிடைக்கும்.

துலாம் ராசியின் மீது வக்ர சனியின் பலன் எப்படி இருக்கும்
துலாம் ராசிக்காரர்களுக்கு சதய நட்சத்திரத்தில் சனிப்பெயர்ச்சி சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். அதேபோல் தொழில் ரீதியாகவும், இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாகவும், சாதகமாகவும்  இருக்கும். இதனுடன், உங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் நீங்கள் பெறுவீர்கள்.

தனுசு ராசியின் மீது வக்ர சனியின் பலன் எப்படி இருக்கும்
தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர இயக்கம் வெற்றியைத் தரும். வேலை தேடுபவர்கள் இந்த நேரத்தில் வெற்றி பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவார்கள். இதன் காரணமாக உங்களின் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் அமையும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | திடீர் பண வரவு: சனி பகவானின் அருளால் இந்த ராசிகளுக்கு செல்வம் பெருகும், தலைவிதி மாறும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News