மேஷத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: இந்த ராசிகளுக்கு லாபம், வெற்றி, பண வரவு

Laxmi Narayana Rajayogam: மேஷத்தில் புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை நடக்கும். இதன் காரணமாக லக்ஷ்மி நாராயண ராஜயோகம் உருவாகும். இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 12, 2024, 03:50 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண ராஜயோகம் மிகவும் சாதகமாக அமையும்.
  • இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
  • இவர்களது ஆளுமை மேம்படும்.
மேஷத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: இந்த ராசிகளுக்கு லாபம், வெற்றி, பண வரவு title=

Laxmi Narayana Rajayogam: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. ராசிகளை தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என இவை அனைத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. 

சில சமயங்களின் ஒரே ராசியில் பல கிரகங்கள் சேர்வதுண்டு. இப்படிப்பட்ட சேர்க்கைகளால் பல வித ராஜயோகங்கள் உருவாகின்றன. அப்படிப்பட்ட சுல ராஜயோகங்களில் லக்ஷ்மி நாராயண் ராஜயோகமும் ஒன்றாகும். இந்த ராஜயோகங்களால் பலருக்கு நற்பலன்கள் கிடைத்தாலும், சிலருக்கு பிரச்சனைகளும் ஏற்படுவதுண்டு. ஏப்ரல் மாதத்தில் பல கிரகங்கள் தங்கள் இயக்கத்தை மாற்றியுள்ளன.

மேஷ ராசியில் லக்ஷ்மி நாராயண் ராஜயோகம் யோகம் உருவாகும்

ஜோதிடக் கணக்கீடுகளின்படி, அடுத்த மாதம் அதாவது மே மாதம் புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இணைந்து ராஜயோகத்தை உருவாக்கும். மேஷ ராசியில் இந்த ராஜயோகம் உருவாகப் போகிறது. மேஷத்தில் புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை நடக்கும். இதன் காரணமாக லக்ஷ்மி நாராயண ராஜயோகம் உருவாகும். இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். தொழிலில் லாபமும் விருத்தியும் இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண ராஜயோகம் மிகவும் சாதகமாக அமையும். இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். இவர்களது ஆளுமை மேம்படும். இந்த காலம் தொழிலுக்கு நல்ல காலமாக அமையும். வேலை தேடிக் கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும். இதனால் பொருளாதார நிலை மேம்படும்.

மேலும் படிக்க | சூரிய பெயர்ச்சி: இன்னும் 33 மணி நேரத்தில் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்

மிதுனம் (Gemini)

மேஷ ராசியில் உருவாகும் லக்ஷ்மி நாராயண் ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் பண வரவும், வருமானத்திற்கான வழிகளும் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு மே மாதத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். தொழில் வளரும். குழந்தை பாக்கியம் கிட்டும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.  

கடகம் (Cancer)

லக்ஷ்மி நாராயண் ராஜயோகம் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இது இவர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கும். குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும். குடும்பத்துடன் மகிழ்சியான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Astro: புதன் அஸ்தமனம்... பார்த்து சூதானமா இருங்க மக்களே..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News