ராகு கேது பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது பண மழை... வேலை, வியாபாரத்தில் அதீத வெற்றி கிடைக்கும்

Rahu Ketu Peyarchi:  ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் சில ராசிக்காரர்கள் இதனால் அபரிமிதமான நற்பலன்களை அடைவார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 4, 2023, 05:06 PM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு ராகு-கேதுவின் ராசி மாற்றம் மிகவும் சாதகமாக கருதப்படுகிறது.
  • இந்த ராசிக்காரர்களுக்கு ராகு-கேதுவின் மாற்றத்திற்குப் பிந்தைய காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
ராகு கேது பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது பண மழை... வேலை, வியாபாரத்தில் அதீத வெற்றி கிடைக்கும் title=

ராகு-கேது பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: அக்டோபர் மாதம் பல கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன. நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. தீபாவளிக்கு முன் இந்த இரண்டு கிரகங்களும் தங்கள் ராசியை மாற்றப் போகின்றன. இரு கிரகங்களும் எப்போதும் வக்ர நிலையில், அதாவது தலைகீழாக இயங்கும் கிரகங்களாகும். ராகு மேஷ ராசியில் இருந்து மீன ராசியிலும், கேது கன்னி ராசியிலும் பெயர்ச்சி அடைவார்கள். 

பொதுவாகவே அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் சில ராசிக்காரர்கள் இதனால் அபரிமிதமான நற்பலன்களை அடைவார்கள். இவர்களது வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

ராகு கேது பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்
 
மேஷ ராசி (Arties)

வேத ஜோதிடத்தின்படி, ராகு தற்போது மேஷ ராசியில் இருக்கிறார். அவர் விரைவில் மீனத்தில் நுழைவார். இந்த நேரத்தில் மேஷ ராசியில் குரு-சண்டாள யோகம் உருவாகி வருகிறது. ராகு இந்த ராசியை விட்டு வேறு ராசியில் நுழைந்தவுடன் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த அசுப யோகம் விலகும். அதன் பிறகு மேஷ ராசிக்காரர்கள் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் விரைவில் முடிவடையும். இதுமட்டுமின்றி, நிதி ஆதாயத்திற்கான பல சாத்தியக்கூறுகளும் இந்த காலகட்டத்தில் காணப்படுகின்றன.

கடக ராசி (Cancer)

ஜோதிட சாஸ்திரப்படி, கடக ராசிக்காரர்களுக்கு ராகு-கேதுவின் ராசி மாற்றம் மிகவும் சாதகமாக கருதப்படுகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு ராகு-கேதுவின் மாற்றத்திற்குப் பிந்தைய காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். இந்த காலகட்டத்தில் மக்கள் நிதி நெருக்கடியிலிருந்து விடுபடுவார்கள். வீட்டில் மகிழ்ச்சிக்கான வழிகள் அதிகரிக்கும். பணியிடத்தில் வேலை செய்யும் முறையை மேம்படுத்துவது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்!

சிம்ம ராசி (Leo)

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகு-கேதுவின் சஞ்சாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் ராகு-கேதுவின் சுப பலன்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, இந்த காலகட்டத்தில் கடினமான காரியங்களிலும் வெற்றியை அடைவீர்கள். நிதிக் கண்ணோட்டத்தில் இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பல வழிகளில் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில், வியாபாரத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். நிலம் தொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கும் இக்காலம் சிறப்பான முன்னேற்றத்தை தரும். பண வரவு அதிகரிக்கும். மொத்தத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகு கேதுவின் சஞ்சாரம் சாதகமாக அமையும்.

மீன ராசி (Pisces)

ராகு-கேதுவின் சஞ்சாரம் மீன ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையப் போகிறது. உண்மையில், இந்த காலகட்டத்தில், மீன ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் பல நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். உழைக்கும் வகுப்பினருக்கு இந்த நேரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். இதுமட்டுமின்றி நிலுவையில் உள்ள வேலைகளிலும் இந்த நேரத்தில் வெற்றி உண்டாகும். அதே சமயம், வியாபாரம் செய்பவர்களும் இந்த பெயர்ச்சியினால் பெரிதும் பயனடைவார்கள்.

துலா ராசி (Libra)

ஜோதிட சாஸ்திரப்படி ராகு-கேது தங்கள் ராசியை மாற்றி துலாம் ராசிக்காரர்களுக்கு பெரிதும் நன்மை செய்வார்கள். இந்த ராசிக்காரர்கள் அனைத்து விதமான மகிழ்ச்சியையும் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் தோன்றும். மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்தையும் இந்த காலகட்டத்தில் திரும்பப் பெறலாம். வியாபாரத்தில் நிதி ரீதியாக வெற்றி பெறுவீர்கள். தற்செயலான நிதி ஆதாயம் உங்கள் பணத்தை அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி உறவில் இனிமை இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.) 

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை.. அருள் மழை பொழிவார் அன்னை லட்சுமி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News