புதனின் ராசி மாற்றத்தால் கடகத்தில் உருவாகும் ராஜயோகம்

Budh Gochar 2022: புதன் கிரகம் புத்தி மற்றும் பேச்சுக்கு காரணியாக கருதப்படுகிறது. இந்த கிரகம் தனது ராசியை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 18, 2022, 04:04 PM IST
  • ஜூலை 2-ம் தேதி புதியன் ராசி மாற்றம் ஏற்பட்டது
  • ஜூலை 17 புதன் பெயர்ச்சி நடந்தது
  • ரியல் எஸ்டேட் விஷயங்களில் லாபம் கூடும்
புதனின் ராசி மாற்றத்தால் கடகத்தில் உருவாகும் ராஜயோகம் title=

கடந்த ஜூலை 17 ஆம் தேதி அன்று  புதன் கிரகம் தனது ராசியை மாற்றி மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு இடம் பெயர்ந்துள்ளது (புதன் பெயர்ச்சி 2022). இந்த ராசியில் சூரியன் ஏற்கனவே அமைந்துள்ளது. கடக ராசியில் சூரியனும் புதனும் சேர்ந்ததால் இந்த நேரத்தில் புதாதித்யா என்ற சுப யோகம் உருவாகி உள்ளது. இந்த யோகத்தை ராஜயோகம் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே இந்த மங்களகரமான ராஜ யோகத்தின் பலன் எல்லா ராசி மக்களுக்கும் ஏதோனும் ஒரு வகையில் தென்படும். அந்தவகையில் இந்த புத்தாதித்ய ராஜயோகம் உங்கள் ராசிக்கு என்ன பலன் தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. இந்த நேரத்தில் எந்த புதிய வேலையையும் தொடங்க வேண்டாம், இல்லையெனில் நஷ்டம் ஏற்படலாம். வியாபார நடவடிக்கைகளில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சூப்பர், 3 ராசிகளுக்கு சுமார் 

ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு நேரமும் நல்லதல்ல. பணம் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணத்தை புத்திசாலித்தனமாக செலவிடுங்கள், இல்லையெனில் நஷ்டம் ஏற்படலாம். குழந்தைகள் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் திடீரென்று வரலாம். திருமண வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும்.

மிதுனம்: மிதுன ராசியில் புதனின் ராசி மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும் . அவர்களின் கௌரவம் உயரும். குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் பேச்சைக் கேட்பார், உறவுகளும் இனிமையாக இருக்கும். பழைய பிரச்னைகளுக்கு இந்த முறை தீர்வு கிடைக்கும்.

கடகம்: ராசிக்காரர்கள் புதனின் ராசி மாற்றத்தால் கலவையான பலன்களைப் பெறுவார்கள். அவர்களுக்கு பணம் வரும், ஆனால் அதுவும் உடனடியாக செலவழிக்கப்படும். குடும்பம் தொடர்பான எந்த பிரச்சனையும் கவலையை ஏற்படுத்தும். வாழ்க்கை துணைக்கு நேரம் கொடுங்கள், இல்லாவிட்டால் திருமண வாழ்க்கையிலும் பிரச்சனைகள் வரலாம்.

சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வணிகத் துறையிலும் பெரிய வெற்றி கிடைக்கும். அரசியலில் தொடர்புடையவர்கள் ஆதாயம் அடைவார்கள். அவர்கள் அமைப்பில் இருந்து பெரிய பதவியைப் பெறலாம்.

கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த நேரத்தில் செய்த முதலீடுக்குப் பிறகு பலன் கிடைக்கும். பிள்ளைகள் தொடர்பான பிரச்சனைகள் தீரும். சொத்துக்களால் ஆதாயமும் உண்டாகும். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும்.

துலாம்: புதன் மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு பல மகிழ்ச்சியை அளிக்கும். உடன்பிறந்தவர்களுடன் தகராறு ஏற்பட்டால், அவர்கள் விலகிச் செல்லலாம். குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு உண்டாகும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.

விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு நேரம் சாதாரணமாக இருக்கும். பணம் லாபம் மற்றும் செலவும் இருக்கும். எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்க நினைத்தால், அனுபவமுள்ள ஒருவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெறவும். வியாபாரத்திலும் நிலைமை சாதாரணமாக இருக்கும்.

தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் வெற்றி கிடைக்கும், வருமானமும் அதிகரிக்கும். இவர்களுக்கு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். சமயப் பயணம் செல்லும் யோகமும் இந்த நேரத்தில் உண்டாகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

மகரம்: வியாபாரத்தில் லாபகரமான ஒப்பந்தம் ஏற்படும் இந்த ராசிக்காரர்களுக்கு அனுபவசாலிகளின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். சமூகப் பணிகளுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும், அதனால் அவர்களின் கௌரவமும் உயரும். 

கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்கு ஓரளவு நல்ல பலனைத் தரும். எதிரிகளிடமிருந்து விடுதலை பெறுவீர்கள். வெற்றியைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வாழ்க்கை துணையுடன் நல்ல நேரம் செலவிடப்படும். மொத்தத்தில் இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. 

மீனம்: புதன் சஞ்சாரத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை தொடர்பான எதற்கும் மோதல் ஏற்படலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News