Rasipalan: செப்டம்பர் 21ம் நாள், வியாழக்கிழமை ராசிபலன்! 5 ராசிகளுக்கு அருமை!

Daily Horoscope: இன்று கிரகங்கள் நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? 12 ராசிகளுக்கான ராசிபலன்களை தெரிந்துக் கொள்ளுங்கள் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 21, 2023, 06:44 AM IST
  • சிக்கனமாக செயல்பட்டால் மேஷத்திற்கு நல்லது
  • சிம்மத்திற்கு தன்னம்பிக்கை உண்டாகும்
  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்
Rasipalan: செப்டம்பர் 21ம் நாள், வியாழக்கிழமை ராசிபலன்! 5 ராசிகளுக்கு அருமை! title=

Daily Horoscope: அனைத்து ராசிக்காரர்களிலும் ஆளுமையை வரையறுக்கும் அவற்றின் சொந்த குணாதிசயங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளன. உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும் அல்லவா? இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.

21-09-2023  ராசிபலன்கள்:

மேஷம்
ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பயனற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.  எதிர்பாராத சுபச்செய்திகளின் மூலம் சேமிப்பு குறையும். 

ரிஷபம்
பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். ரிஷப ராசிக்காரர்களுக்கு வியாபார பணிகளில் சில நுட்பமான விஷயங்களைப் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நிதானம் வேண்டும். போட்டிகள் நிறைந்த நாள்.

மிதுனம்
ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறக்கும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். பணி மாற்றச் சிந்தனைகள் மேம்படும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணம் ஈடேறும். நன்மை நிறைந்த நாள்.

மேலும் படிக்க | ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையில் 7 கிரகங்கள் சிக்கினால்? கால சர்ப்ப தோஷ பரிகாரங்கள்

கடகம்
வியாபார பணிகளில் புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். நெருக்கமானவர்களின் மூலம் மனச் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். திட்டமிட்ட சில பணிகளில் மாற்றமான சூழல் அமையும். சிக்கல் குறையும் நாள்.

சிம்மம்
தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார பணிகளில் தனவரவுகள் மேம்படும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வமின்மை ஏற்பட்டு நீங்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.

கன்னி
உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.

துலாம்
எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கோபமான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.

விருச்சிகம்
சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இணையம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

தனுசு
வியாபாரம் நிமிர்த்தமான மாற்றங்களில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுப்பது நல்லது. உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். தடைகள் குறையும் நாள்.

மேலும் படிக்க | 12 ஆண்டுக்கு பிறகு குருவால் அதிசய நிகழ்வு.. அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்

மகரம்
உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும்.  வியாபார வளர்ச்சிக்கான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். இணைய பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.

கும்பம்
வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான செலவுகள் ஏற்படும். கடன் தொடர்பாக இருந்துவந்த சிக்கல்கள் குறையும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சாதனை நிறைந்த நாள்.

மீனம்
பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தெய்வீக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். அலைச்சல்கள் குறையும் நாள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | கன்னியில் அஸ்தமாகும் செவ்வாய்! காரியத்தில் கண்ணாய் இல்லாவிட்டால் 5 ராசிகளுக்கு ஆப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News