சனி-செவ்வாய் இந்த ராசிகளை பாடாய் படுத்தும், 'ஷடாஷ்டக் யோகம்' தொல்லைகளைத் தரும்

Shadashtak Yog 2023: சனி மற்றும் செவ்வாய் இரண்டும் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்கள் ஆகும். இன்று முதல், சனி-செவ்வாய் ஷடாஷ்டக யோகத்தை உருவாக்குகிறார், இது 4 ராசிக்காரர்களுக்கு சுமார் 2 மாதங்களுக்கு தொல்லைகளைத் தரும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 11, 2023, 11:01 AM IST
  • சனி-செவ்வாயால் 6-க்கு 8 என்னும் ஷடாஷ்டக யோகம் உருவாகிறது.
  • இந்த ஷடாஷ்டக யோகத்தின் தாக்கம் ஜூலை மாதம் வரை இருக்கும்.
  • எந்த ராசிக்காரர்கள் ஷடாஷ்டக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டும்.
சனி-செவ்வாய் இந்த ராசிகளை பாடாய் படுத்தும், 'ஷடாஷ்டக் யோகம்' தொல்லைகளைத் தரும் title=

சனி மற்றும் செவ்வாய் கிரகத்தால் உருவாகும் ஷடாஷ்டக யோகம் 2023: வேத ஜோதிட சாஸ்திரப்படி, நேற்று அதாவது மே 10 ஆம் தேதி செவ்வாய் கடக ராசியில் பெயர்ச்சி அடைந்தார். அதேசமயம் சனி அதன் அசல் திரிகோண ராசியான கும்பத்தில் உள்ளது. இதன் மூலம் செவ்வாயும் சனியும் இணைந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்கியுள்ளது, இந்த யோகம் 2023 ஜூலை 1 வரை இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தில் ஷடாஷ்டக யோகம் மிகவும் மோசமானதாகக் கருதப்படுகிறது. செவ்வாய் மற்றும் சனியால் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஷடாஷ்டக யோகம் உருவாகியுள்ளது. இந்த நேரத்தில் செவ்வாய் வன்முறையையும் கோபத்தையும் அதிகரிப்பார், மறுபுறம் சனி துக்கத்தையும் வறுமையையும் தருவார். இப்படிப்பட்ட நிலையில் எந்த ராசிக்காரர்களுக்கு சனி, செவ்வாய் காரணமாக உருவாகும் ஷடாஷ்டக யோகம் கஷங்களை தரும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

ஷடாஷ்டக யோகம் எப்படி உருவாகிறது
ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் ஆறாவது மற்றும் எட்டாவது வீட்டில் இருக்கும்போது ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. இந்த நேரத்தில் கடகத்தில் செவ்வாய் இருப்பதாலும், சனி கும்பத்தில் இருப்பதாலும் ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. இதனால் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | இந்த 5 ராசிகளுக்கு சனியால் ராஜ வாழ்க்கை அமையும், அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

சனி - செவ்வாய் ஷடாஷ்டக யோகம்
சனி - செவ்வாய் ஷடாஷ்டக யோகம்: இந்த யோகம் 2 மாதங்களுக்கு 4 ராசிக்காரர்களுக்கு நெருக்கடியான காலகட்டத்தை தரும். இந்த மக்கள் துக்கம், நோய், கடன், கவலை, துரதிர்ஷ்டம் மற்றும் துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

கடக ராசி: சனி மற்றும் செவ்வாய் கிரகத்தால் உருவாகும் ஷடாஷ்டக யோகம் கடக ராசிக்காரர்களை தொல்லைகளைச் செய்யும். இந்த ராசிக்காரர்கள் பணத்தை முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் கடகத்தில் மட்டுமே இருப்பதால் கோபத்தையும் வன்முறையையும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், கருத்து வேறுபாடு அல்லது தகராறுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சொத்து சம்பந்தமான தகராறும் ஏற்படலாம்.

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக இருந்தாலும் ஷடாஷ்டக யோகம் சிரமங்களைத் தரும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்கும். பிரச்சனைகள் அதிகரிக்கலாம். சகோதர சகோதரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல்நலம் சம்பந்தமான பிரச்சனை வரலாம்.

தனுசு ராசி: ஷடாஷ்டக யோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். எனவே, வருமானம் அதிகரித்த பிறகும், ஒரு பட்ஜெட்டை உருவாக்கி முன் செல்லுங்கள். பதற்றம் ஏற்படலாம். மணவியுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். விரும்பிய லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் வணிகர்களும் கவனமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கும்ப ராசி: கும்ப ராசிக்கு அதிபதி சனி, இந்த நேரத்தில் சனி கும்பத்தில் மட்டுமே இருக்கிறார். ஏழரை சனி இந்த ராசிக்காரர்கள் மீதும் இயங்குகிறது. செவ்வாய் மற்றும் சனியால் உருவாகும் ஷடாஷ்டக யோகம் டென்ஷனையும் கோபத்தையும் தரும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் வரலாம். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 11 நாளில் வரப்போகும் அபூர்வ அமாவாசை...! இந்த சடங்குகளை செய்ய மறவாதீர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News