கடகத்தில் சுக்கிர-ஆதித்ய யோகம்... வாழ்க்கையில் உச்சம் தொட உள்ள ‘சில’ராசிகள்..!

ஆடி மாதம் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதம். சூரியன் சந்திரனின் ராசியான கடக ராசியில் ஜூலை 16ஆம் தேதி பிரவேசித்துள்ள நிலையில், சுக்கிரனும் ஏற்கனவே கடகத்தில் உள்ளதால் சுக்ர ஆதித்ய யோகம் ஏற்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 17, 2024, 05:24 PM IST
கடகத்தில் சுக்கிர-ஆதித்ய யோகம்... வாழ்க்கையில் உச்சம் தொட உள்ள ‘சில’ராசிகள்..! title=

ஆடி மாதம் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதம். சந்திரனின் இடமான கடக ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்வதால் இந்த மாதம் முழுவதுமே கடவுள் வழிபாட்டுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. கிரகங்களின் ராசிகளை மாற்றுவதன் மூலம், சில கிரகங்களின் இணைவுகளும் உருவாகின்றன. சூரியன் ஒரு மாத காலத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றிக் கொள்கிறது. ஜாதகத்தில் சூரியன் பலமாக இருந்தால், குறிப்பிட்ட தனது தொழில், வேலை மற்றும் பிற துறைகளில் நல்ல வெற்றியைக் குவிக்கும் அதிர்ஷ்டத்தை பெறுகிறார். 

ஆடி மாதம் என்பது தட்சிணாயன காலத்தின் தொடக்க காலம். இதுவரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். இந்நிலையில், சூரியன் சந்திரனின் ராசியான கடக ராசியில் ஜூலை 16ஆம் தேதி பிரவேசித்துள்ள நிலையில், சுக்கிரனும் ஏற்கனவே கடகத்தில் உள்ள நிலையில் சுக்ர ஆதித்ய யோகம் ஏற்பட்டுள்ளது. மேலும், கடகத்தில் புதனும் உள்ளதால், புதனும் சூரியனும் இணைந்து புத ஆதித்ய யோகமும் ஏற்பட்டுள்ளது. கடகத்தில், சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய மூன்று முக்கிய கிரகங்களின் சேர்க்கையால் மிகவும் சுப யோகங்கள் உருவாகியுள்ளன. 

புதன் மற்றும் சூரியன் இணைவதால் புதாதித்ய யோகமும், சூரியன் மற்றும் சுக்கிரன் இணைவதால் சுக்ராதித்ய யோகமும் உருவாகி இருக்கும் நிலையில் புதாதித்யமும் சுக்ராதித்ய யோகமும் சேர்ந்து அமைவதால் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெற்று வாழ்வில் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள் என்கின்றனர் ஜோதிடர்கள். இந்நிலையில், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் உச்சம் தொடும் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.

கடக ராசி: சூரிய பெயர்ச்சி பலன்கள்

ஆடி மாதத்தில் கடக ராசியில் இரண்டு ராஜ யோகங்கள் சேர்ந்து அமைவது கடக ராசிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். வாழ்க்கையில் திடீர் மாற்றத்தைக் காண்பீர்கள். மனதில் இதனால் சந்தோஷம் நிறைந்திருக்கும். எவ்வளவோ முயற்சி செய்தும் நடைபெறாமல் இருந்த வேலைகள் அனைத்தும் சுமுகமாக நிறைவேறும். சமூகத்தில் உங்களின் மதிப்பும் செல்வாக்கும் உயரும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் இலக்குகளை எளிதாக அடைவதில் வெற்றி பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வாய்ப்புகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | அருள் பாலிக்கும் கடவுளை பணக்காரராக்கும் பக்தர்கள்! இந்தியாவின் பணக்கார கோவில்கள்!

கன்னி ராசி: சூரிய பெயர்ச்சி பலன்கள்

ஜூலை மாதத்தில் புத்தாதித்ய மற்றும் சுக்ராதித்ய ராஜயோகம் இணைந்து அமைவது கன்னி ராசியினருக்கு நல்ல பலன்களை தரும். இந்த யோகம் அமைவதால், உங்கள் வருமானத்தில் குறிப்பிடத்தக்க உயர்வைக் காண்பீர்கள். லாப வாய்ப்புகள் அதிகரிப்பதைக் காண்பீர்கள், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். முழுமையடையாத பணிகள் முடிவடையும். உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். உணவு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பும் பாசமும் நிலைத்திருக்கும்.

துலாம் ராசி: சூரிய பெயர்ச்சி பலன்கள்

புத்தாதித்ய மற்றும் சுக்ராதித்ய ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்குது. உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். வருமானமும், ஆடம்பரமும் பெருகும். உங்களின் நிதி நிலையில் முன்பை விட நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வெளியூர் பயணங்கள் கைகூடும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். மறைவான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்க... விக்னங்களை நீக்கும் விநாயகர் சிலை ஒன்றே போதும்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News