ஜோதிடத்தின்படி, "கிரகங்களின் ராஜா" என்ற பட்டம் சூரியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது ஒருவரின் ஆன்மாவின் அதிபதி என்று அறியப்படுகிறது. ஒரு நபரின் ஜாதகத்தில் சூரியன் தந்தையைக் குறிக்கிறது. நவகிரங்களில் தந்தை என்று அழைக்கப்படும் சூரியன், நோய் எதிர்ப்பு சக்தி, நேர்மறை, சகிப்புத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு அதிபதி ஆவார். சூரியன் உயர் அதிகாரத்தைக் கொடுப்பவர், அவரது அருள் இருந்தால் தான், ஒருவர், தனது வாழ்க்கையில் நன்மைகளை அடைய முடியும். அதேபோல, மனிதர்களின் இதயம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை நிர்ணயம் செய்பவர் சூரியன் ஆவார்.
நவம்பர் 16, 2022 அன்று, சூரியன் விருச்சிக ராசிக்கு மாறுகிறார், இது ஒவ்வொரு ராசியிலும் வெவ்வேறு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். 2022 நவம்பர் 16ம் நாளன்று மாலை 6:58 மணிக்கு சூரியன் விருச்சிக ராசிக்கு செல்கிறார். சூரியனின் இந்த சஞ்சாரம், 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், சில ராசியினருக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது என்று ஜோதிடம் சொல்கிறது.
விருச்சிக ராசிக்கு பெயரும் சூரியனின் தாக்கத்தால், இந்த ராசிக்காரர்கள் ஒரு மாதத்திற்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள்
மேஷம்: மேஷ ராசிக்காரர்களின் ஐந்தாம் வீட்டின் அதிபதி சூரிய பகவான், எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த ராசிக்காரர்கள் இதயம் மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, உடலில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதை கவனமாக கையாள்வது என எச்சரிக்கையுடன் இருந்தால் போதும்.
பரிகாரம் - அனுமனுக்கு அர்ச்சனை செய்யவும்.
கடகம்: கடக ராசிக்காரர்களின் இரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சூரியன் ஐந்தாம் வீட்டிற்கு மாறுகிறார். இது நெருங்கியவர்களுடனான வாய்த் தகராறை ஏற்படுத்தலாம். இதனால் கருத்து வேறுபாடும் சண்டையும் ஏற்படலாம் என்பதால், வாய் வார்த்தைகளை கட்டுப்படுத்துவது நிம்மதியைக் கொடுக்கும். இல்லாவிட்டால், மன அமைதியை வாய் சவடால் கெடுத்துவிடும்.
பரிகாரம் - ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது நல்ல பரிகாரமாக இருக்கும்.
மேலும் படிக்க | சனி பகவான் அபிஷேக பாலை தினம் கேட்டு வாங்கி அருந்தும் ‘அதிசய’ காகம்!
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு, சூரியன் லக்னத்தின் அதிபதியாக இருந்து நான்காவது வீட்டிற்கு மாறுகிறார். அவர்கள் குறிப்பாக தங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். இதனுடன், இந்த ராசிக்காரர்கள் கோபத்தில் நிதானத்தை இழந்து பதற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, சண்டையை தவிர்க்க நிதானத்தை கடைபிடிக்கவும்.
பரிகாரம்- தினமும் காலையில் சூர்ய வழிபாடு செய்யவும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களின் நான்காம் வீட்டிற்கு அதிபதி சூரியன், ஏழாவது வீட்டிற்கு மாறுகிறார். இதனால், கூட்டாளிகளுக்கும் இடையே சில சச்சரவுகள் ஏற்படலாம். தங்கள் திருமண வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும்.
பரிகாரம் - காயத்ரி மந்திரத்தை ஜபிக்கவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | விருச்சிக ராசியில் சுக்கிரன்; ‘இந்த’ ராசிகளுக்கு பண விரயம் ஏற்படலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ