திருவண்ணாமலை: நித்தியானந்தா ஆசிரம வாசலில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட நித்தியானந்தாவின் முழு உருவ சிலைக்கு பெண் சீடர்கள் பூஜை செய்து பக்தர்களுக்கு படிக லிங்க ஆசி வழங்கி சீடர்களாக சேர்த்துக் கொண்டனர். ஐப்பசி மாதம் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் மாதமாகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியை காட்டிலும் ஐப்பசி மாத பெளர்ணமிக்கு தனிச்சிறப்பு உண்டு. அந்த தினத்தன்று தான், சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவை பெற்றார் என்பது ஐதீகம். இந்த புனித நாள் இந்துக்களால் மிகவும் பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நித்தியானந்தாவின் கைலாசா ஆசிரமத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஆசிரம வாசலில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட நித்தியானந்தாவின் முழு உருவ சிலைக்கு பெண் சீடர்கள் மாலை அணிவித்து நெய் வைத்தியம் செய்து மகாதீபாரதனை செய்தனர்.
மேலும் படிக்க | யம்மாடி....இத்தனை கோடி சொத்து இருக்கா திருப்பதி கோவிலுக்கு
அதனைத் தொடர்ந்து நித்தியானந்தரின் சீடர்கள் கிரிவலம் வரும் பக்தர்களை நித்தியானந்தாவின் தீட்சையை பெறுவதற்காக நான்கு இருக்கைகள் அமைத்து ஆண் சீடர்கள் தனியாகவும், பெண் சீடர்கள் தனியாகவும் அங்கு வரும் பக்தர்களை கவனித்துக் கொண்டனர்.
பக்தர்களின் தலையில் படிக லிங்கத்தை வைத்து உங்களுக்கு உள்ள பிரச்சனைகள் மன உளைச்சல்கள் அனைத்தும் தீரும் என்று சொல்லி திருநீர் இட்டு அவர்களிடம் நீங்கள் எந்த ஊரில் இருந்து வருகிறீர்கள், உங்களது தொலைபேசி எண் உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொண்டனர்.
நித்தியானந்தரிடம் சீடர்களாகவும் பல்வேறு பணிகளில் ஈடுபட விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்கிறோம் என்று, அங்கு வந்தவர்களிடம் ஆசை வார்த்தை கூறும் நித்தியானந்தாவின் சீடர்கள் ஆட்சேர்த்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்; பண இழப்பை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!
பல ஆண்டுகளுக்குப் பிறகு கிரிவலப் பாதையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நித்தியானந்தரின் முழு உருவ சிலைக்கு சிறப்பு பூஜை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிரிவலம் வரும் பக்தர்களின் தலையில் படிக லிங்கத்தை வைத்து ஆசை வார்த்தை கூறி சீடர்களாக பக்தர்களை சேர்ப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், இச்சம்பவம் கிரிவலம் வரும் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில காலம் அடங்கிக் கிடந்த நித்தியானந்தாவின் லீலைகள் தொடங்கிவிட்டது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | கீழ்ப்பாக்கம் மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை
மேலும் படிக்க | அன்ன தோஷம் படுத்தும் பாடுகளும், பரிகாரமும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ