குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பாரம்பரியம் மிக்க உதயாஸ்தமன பூஜை நடைபெற்றது. திருவிதாங்கூர் மன்னராட்சி காலத்தில் 1739ம் ஆண்டு குளச்சலில் டச்சு படையுடனான போர் துவங்கப்பட்டது. 1740ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் உதயமார்த்தாண்ட வர்மா நேரடியாக போர்களத்தில் இறங்கும்முன் திருநெல்வேலியை சேர்ந்த குறுநில மன்னரான பொன்பாண்டிய தேவர் மற்றும் தங்கள் படைகளுடன், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இறைவன் முன் போர் ஆயுதங்களை சமர்ப்பித்து பூஜை செய்தபின் போருக்கு புறப்பட்டு வெற்றி கண்டார் என்பது வரலாறு.
இந்நிகழ்வை நினைவுகூறும் விதமாக 1956ம் ஆண்டுவரை திருவிதாங்கூர் மன்னர் வம்சாவளியினர் முன்னிலையில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உதயாஸ்மன பூஜை நடந்து வந்துள்ளது.
பின்னர் திருவட்டார் கோவில் தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்ததை அடுத்து இந்த பூஜை நடத்தப்படவில்லை. இதை அடுத்து 67 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திருவிதாங்கூர் மற்றும் பொன்பாண்டிய தேவரின் வம்சாவளியினர் சார்பில் கடந்த ஆண்டு உதயாஸ்தமன பூஜை நடத்தப்பட்டது.
இரண்டாவது ஆண்டாக திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உதயாஸ்தமன பூஜை நடைபெற்றது . காலை 11 மணி அளவில் கோவில் முன்பு உள்ள உதயமார்த்தாண்ட மண்டபத்தில் மன்னரின் பாரம்பரிய போர் ஆயுதங்கள் பூஜைக்காக வைக்கப்படுகிறது.
இந்த சிறப்பு பூஜையில் திருவிதாங்கூா் மன்னா் பரம்பரையின் தற்போதைய வாரிசான திருவனந்தபுரம் கவடியாா் அரண்மனை அசுவதி திருநாள் கௌரி லட்சுமிபாய் தம்புராட்டி கலந்து கொண்டார் .
அனைத்து மறவர் நல கூட்டமைப்பினர், பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழுவினர் பொன்னம் பாண்டிய தேவர் வாரிசுகள் பங்கேற்கின்றனர். இதனைத் தொடர்ந்து சிலம்பம் போட்டிகளும் நடைபெற்றது.
மேலும் படிக்க | இன்று முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்... சில முக்கிய அம்சங்கள் விபரம்..!!
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் பழைமையான வைணவக் கோயிலாகும். 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவதாக கருதப்படும் இந்த ஆலயம் 13 மலைநாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றாகும். இந்த ஊாின் நடுவில் பள்ளி கொண்டிருக்கும் ஆதி கேசவ பெருமானின் திருவடிகளை வட்டமிட்டு பரளியாறு ஓடுவதால் இந்த ஊா் திருவட்டாறு எனும் பெயர் பெற்றது.
இந்த ஆலயத்தில் ஆண்கள் சட்டை அணியக்கூடாது. கருவறையில் மூன்று நிலைவாயில்கள் உள்ளன. திருமுகம், திருக்கரம், திருப்பாதம் எனும் 3 பகுதிகளை ஒவ்வொரு நுழை வாயிலிலும் காணலாம். திருமுக நிலைவாயிலில் அறிதுயிலில் ஆழந்துள்ள முகத்தையும் நீட்டிய இடக்கையையும் ஆதிசேடனையும் கருடாழ்வாரையும் காணலாம். திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ஐம்படையினையும் காணலாம். தரையில் தாயாருடன் கூடிய பெருமாளின் உலோகத் திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பாத வாயிலில் திருப்பாதங்களையும் இருவர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளையும் காணலாம். திருமுகம், திருக்கரம், திருப்பாதம் இவற்றை இதே வரிசைக்கிரமத்தில் தரிசிப்பது இக்கோவிலின் மரபு ஆகும். இங்கு பெருமாளுக்கு பூஜை செய்பவர்கள் போத்திமார் எனப்படுகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ