Sukra Nakshatra Peyarchi In Pooran: வேத ஜோதிடத்தின் படி, சுக்கிரன் மிகவும் சுப கிரகமாக கருதப்படுகிறது. அதனுடன் இந்த கிரகம் செல்வம், ஆடம்பரம், அன்பு, அழகு, போன்றவையை அள்ளித் தரும் கிரகமாகவும் கருதப்படுகிறார். பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபர் அரசனைப் போல வாழ்க்கையும், அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இது தவிர, சுக்கிரனின் நிலையில் ஏற்படும் மாற்றம் 12 ராசிக்காரர்களிலும் மாற்றத்தை கொண்டு வரும். குறிப்பாக காதல், திருமண வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுவார் சுக்கிரன்.
இந்நிலையில் இன்னும் 2 நாட்களில் அதாவது ஆகஸ்ட் 11 ஆம் தேதி சுக்கிரன் பூரம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடையப் போகிறார். சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக ஆதாயம் கிடைக்கும். அனைத்தும் வெற்றி பெறுவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியை உண்டாகும். எனவே அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
மேஷம் (Aries Zodiac Sign): மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி நல்ல சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் இதுவரை இருந்த குடும்ப பிரச்சனைகள் அனைத்தும் குறையும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனுடன், பயணத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும், இதனால் நன்மை உண்டாகும். தொழிலில் லாபம் உண்டாகும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் லாபம் உண்டாகும். திருமணம் நடக்கலாம். வியாபாரத்தில் லாபம் பெருகும்.
கடகம் (Cancer Zodiac Sign): கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் பலன் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பல்வேறு துறைகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை வலுவடையலாம். பணி இடத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். வணிகத் துறையில் ஒரு பெரிய வாய்ப்பைப் பெறலாம். புதிய வழியில் வருமானம் பெறுவீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். திருமணம் நிச்சயிக்கப்படலாம். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
சிம்மம் (Leo Zodiac Sign): சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் சாதகமாக பலன் கிடைக்கும். வேலை மற்றும் வணிகம் இரண்டிலும் பலன் கிடைக்கும். பதவி உயர்வு பெறலாம். பொருளாதார நிலை மேம்படும். இதனால் வருமானமும் உயரலாம். நிதி சிக்கல்களைத் தீர்க்கலாம். வெளியில் சிக்கியிருந்த பணத்தை நீங்கள் திரும்பப் பெறலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ