வளமான வாழ்க்கைக்கு இந்த பரிகாரம் செய்தால் தோஷ நிவர்த்தி! சுக்கிரன் ஹேப்பி!

Venus Alias Sukran Dosha Nivarthi: நிம்மதியாக வாழ அருள் புரியும் சுக்கிரனின் பெயர்ச்சியால் துன்பப்படப்போகும் இந்த 4 ராசிகளும் செய்ய வேண்டிய தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 2, 2022, 07:31 AM IST
  • சுக்கிர பெயர்ச்சியால் துன்பப்படும் ராசிகளுக்கு தோஷ நிவர்த்தி பரிகாரம்
  • நிம்மதியாக வாழ அருள் புரியும் சுக்கிரனின் பெயர்ச்சி
  • பிரபலமாக்கும் சுக்கிரனின் அருட்கடாட்சம் உங்களுக்கே
வளமான வாழ்க்கைக்கு இந்த பரிகாரம் செய்தால் தோஷ நிவர்த்தி! சுக்கிரன் ஹேப்பி! title=

ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்களில் சுக்கிரன் சஞ்சாரம் மிகவும் முக்கியமானது. ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரம் இருக்கும் இடமே, அவர்களின் வளமான வாழ்க்கைக்கும், பிரபலமாவதற்கும் சொகுசாக வாழ்வதற்கும் அடிப்படையானதாக கருதப்படுகிறது. பிறரை ஈர்க்கும் தோற்றத்தைக் கொண்டவர்களும் சுக்கிரனின் அருட்கடாட்சம் பெற்றவர்களாகவே இருப்பார்கள். ஆனால், சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் வக்கிரமானால் வாழ்க்கையின் நிம்மதி கேள்விக்குறியாகும். சுக்கிரனின் பரிவர்த்தனையால், சில ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி என்றால், பல ராசிகளுக்கு மனதில் வருத்தமும் விரக்தியும் ஏற்படுகிறது. தற்போது சுக்கிரனின் அருள் கிடைக்காமல் வாடும் இந்த ராசிக்காரர்கள் சுக்கிரனை அமைதிப்படுத்துவதற்கான பரிகாரங்கள் செய்தால் தீய பலன்கள் குறைந்து நிம்மதி ஏற்படும். 

ஜோதிடத்தின் அடிப்படையில், அழகு, ஆடம்பர மற்றும் காதலுக்கான கிரகமான சுக்கிரன், ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் முக்கிய அதிபதி ஆவார். இன்னும் 5 நாட்களில் அதாவது 2022, ஆகஸ்ட் 7ம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை காலை 05:12 மணிக்கு தனது நட்பு கிரகமான புதனின் ராசியான மிதுனத்தில் இருந்து எதிரி கிரகமான சந்திரனின் கடக ராசிக்கு மாறுகிறார்.

மேலும் படிக்க | கால சர்ப்ப தோஷத்தைப் போக்கும் நாக பஞ்சமி ராகு கேதுவுக்கு உகந்த நாள்

மாத இறுதி வரை கடக ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பது, சிலருக்கு திருமண வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும். மேஷம், மிதுனம், மகரம், கன்னி ஆகிய ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பெற வாய்ப்புள்ளது. மறுபுறம், துலாம், கடகம், தனுசு மற்றும் கும்பம் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த 4 ராசிக்காரர்களும் சுக்கிரனை அமைதிப்படுத்த பின்பற்ற எளிதான பரிகாரங்கள் இவை. 11 வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருக்கவும். விரதம் இருக்கும்போது, ஒரு வேளை உணவில் மட்டும் உப்பை சேர்த்துக் கொள்ளவும்.  வெள்ளிக்கிழமைகளில் வெண்ணிற ஆடைகளை அணியவும்.

வெள்ளிக்கிழமைகளில் 11/21/51/108 என்ற கணக்கில் "ஓம் த்ரம் ட்ரீம் த்ரௌன் சஹ சுக்ரே நமஹ" என்ற சுக்ர பீஜ மந்திரத்தை உச்சரிக்கவும். சுக்கிரன் சம்பந்தப்பட்ட உணவு பொருட்களான சர்க்கரை, அரிசி, பால், தயிர் மற்றும் நெய்யில் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யுங்கள்.

மேலும் படிக்க | ஜூலை 29 முதல் இந்த ராசிகளுக்கு நல்ல நேரம்: குரு வக்ர பெயர்ச்சியால் குபேர யோகம்

குழந்தைகளுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக் கொடுங்கள். கற்பூரம், சர்க்கரை மிட்டாய், தயிர் போன்றவற்றையும் தானமாக வழங்கலாம். பெண்களை மதிப்பவர்கள் மீது சுக்கிரனின் கருணைப்பார்வை என்றும் உண்டு என்பது பலருக்கும் தெரியாத விஷயம். எனவே குடும்பத்தில் உள்ள பெண்களையும், வெளியிடத்தில் உள்ள பெண்களுக்கும் உரிய மரியாதை கொடுக்கவும்.  உங்கள் சுற்றுப்புறத்தில் தூய்மையை பராமரிக்கவும்.

ரோஜா மலர்கள் மற்றும் மலர்களில் இருந்து தயாரிக்கப்பட்ட வாசனை திரவியங்களை பயன்படுத்துவது சுக்கிரனை அமைதிப்படுத்தும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிபடுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஒரே மாதத்தில் நிகழும் 3 கிரகங்களின் ராசி மாற்றம்; நேரடி அருள் பெரும் ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News