ஜூன் 24-30 வார ராசிபலன்! மனக்கசப்பு ஏற்படலாம் கும்ப ராசியினரே! எச்சரிக்கை அவசியம்...

Weekly horoscope June 24-30: 12 ராசிக்காரர்களுக்கும் வரும் வாரத்திற்கான (திங்கள் முதல் ஞாயிறு வரை) ராசிபலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 21, 2024, 09:33 PM IST
  • மகரத்திற்கு செல்வம் வந்து சேரும்
  • கும்ப ராசிக்காரர்களுக்கு உறவினர்களுடன் மனக்கசப்பு
  • மீன ராசியினருக்கு பாடம் கிடைக்கும்
ஜூன் 24-30 வார ராசிபலன்! மனக்கசப்பு ஏற்படலாம் கும்ப ராசியினரே! எச்சரிக்கை அவசியம்... title=

ஜூன் 24ம் தேதியன்று துவங்கும் எதிர்வரும் எதிர்வரும் வாரம் யாருக்கு எப்படி இருக்கும்? அறிவோம் வார ராசிபலன்...

மேஷம்
செயல்களில் இருந்த மந்த தன்மை விலகும். உடன் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். ஆன்மிக பணிகளில்  பொறுப்புகள் மேம்படும். வேலை ஆட்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வழக்கு செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். 

ரிஷபம் 
வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் சில நெருக்கடிகள் தோன்றி மறையும். நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் நடைபெறும். சகோதரர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செயல்படவும். 

மிதுனம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் அகலும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.  

கடகம் 
மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். தேக நலனில் கவனம் வேண்டும். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். சிறு சிறு வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். சலனமான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும்.   

மேலும் படிக்க | மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...

சிம்மம் 
பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். சிம்ம ராசிக்காரர்களுக்கு பண வரத்து இயல்பாகும். நெருக்கடிகள் குறையும். சிந்தனைகளில் குழப்பங்கள் ஏற்படும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாறுபட்ட சுழல்கள் உண்டாகும். விளையாட்டு விஷயங்களில் பொறுமை வேண்டும்.  

கன்னி
திட்டமிட்ட காரியங்களை மாற்றம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புக்கள் மேம்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும்.  

துலாம் 
நினைத்த பணிகள் எதிர்பார்த்த விதத்தில் முடியும். தந்தை வழியில் ஆதரவு மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவுகளுடன் சுமுகமான சூழல்கள் அமையும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். தடைப்பட்டு வந்த வரவுகள் கிடைக்கும். 

விருச்சிகம் 
தோற்றப்பொலிவு அதிகரிக்கும். ஆடை ஆபரணங்களை வாங்குவதில் உற்சாகம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உருவாகும். எதிர்பாராத சில உதவிகளால் வியாபாரத்தில் மாற்றம் உண்டாகும். அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் மறையும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும்.  

மேலும் படிக்க | புதாதித்ய - சுக்ராதித்ய யோகத்துடன் பெளர்ணமியும் சேர்ந்தால்? பணமழையில் நனையும் ராசிகள்!

தனுசு
ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். சில அனுபவம் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். அரசு சார்ந்த காரியத்தில் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் புதுமையான சூழல்கள் உருவாகும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது மாற்றத்தை ஏற்படுத்தும்.  

மகரம் 
நினைத்த சில பணிகள் முடிவதில் அலைச்சல்கள் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளால் செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும். சகோதர வகையில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வேலையாட்களிடம் தட்டிக் கொடுத்து செயல்படுவது நல்லது. வித்தியாசமான கற்பனைகள் மூலம் குழப்பம் அதிகரிக்கும். 

கும்பம் 
மனதில் நினைத்த காரியங்கள் கைக்கூடும். மூத்த உடன் பிறப்புகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பழைய நண்பர்கள் சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும். சேமிப்பு குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம்.

மீனம் 
 உறவினர்களின் சந்திப்புகள் ஏற்படும். இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான செயல் திட்டங்களை உருவாக்குவீர்கள். பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஏழரையை விட அதிகமாய் பயமுறுத்தும் அஷ்டமச் சனி! சனிக்கிழமையன்று சனீஸ்வர வழிபாடு நலம் தரும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News