கடந்த 10 நாள்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கும் இப்போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதுவரை இவ்விரு அணிகளும் மூன்று முறை ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தியுள்ளது.
அதில், 1986 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இலங்கை அணியும், 2000ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணியும் கோப்பையை வென்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக, இலங்கை 1986, 1997, 2004, 2008, 2014 என ஐந்து முறை ஆசிய கோப்பை வென்றிருக்கிறது. பாகிஸ்தான். 2000, 2012 ஆகிய தொடர்களில் சாம்பியனாகியுள்ளது.
மேலும் படிக்க | சச்சின் மகளை தவிர்த்து மற்றொரு நடிகையை டேட்டிங் செய்யும் கில்?
இதனால், 6ஆவது முறையாக கோப்பையை வெல்ல இலங்கை அணியும், பத்தாண்டு காலமாக எட்டாக் கனியாக உள்ள கோப்பையை வெல்லும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் இன்று களமிறங்க உள்ளன. நடப்பு தொடரில் இரு அணிகளும் தங்களின் முதல் போட்டியில் படுதோல்வியை சந்தித்தன. இலங்கை அணி ஆப்கானிஸ்தானிடம் படுதோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்றிருந்தது. இருப்பினும், சூப்பர் - 4 சுற்றில் சுதாரித்துக்கொண்ட இவ்விரு அணிகளும் தற்போது இறுதிப்போட்டியை அடைந்துள்ளன.
The #AsiaCup Final lies in wait.
Where are you watching tonight’s game from
Tell us in the comments! #RoaringForGlory #SLvPAK pic.twitter.com/JIB52BWv3b
— Sri Lanka Cricket (@OfficialSLC) September 11, 2022
குறிப்பாக, இலங்கை அணி சுப்பர் - 4 சுற்றில் மூன்று போட்டிகளையும் வென்று அசுர பலத்துடன் காட்சியளிக்கிறது.ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, தனஞ்செயா டி செல்வா என மிரட்டும் சுழல் கூட்டணியை வைத்துள்ளது. பேட்டிங்கிலும் டாப் ஆர்டர் பேட்டர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும், பாகிஸ்தான் உடன் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை சிறப்பாக விளையாடியிருந்தது. மறுமுனையில், பாகிஸ்தான் அணியும் சமபலத்துடனே காணப்படுகிறது. கேப்டன் பாபர் அசாம் இத்தொடரில் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும், முகமது ரிஸ்வான், இஃப்திகர் அகமது, முகமது நவாஸ் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக ரன்களை குவித்து வருகின்றனர்.
பாகிஸ்தானின் பந்துவீச்சு படையையும் அசைக்க முடியாததாக உள்ளது. எனவே, இன்றைய போட்டியை வெற்றிபெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம். முதலில் பந்துவீசும் அணியே இத்தொடரில் அதிகமாக வெற்றிபெற்றுள்ளது என்பதால் டாஸ் அதிக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
மேலும் படிக்க | உலக கோப்பைக்கான இந்திய அணி இதுதான்! வெளியான தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ