இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் 3-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றிப்பெற 165 நிர்ணயிக்கப்பட்டுள்ளது!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தற்போது நடைப்பெற்று வரும் டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மழை குறிக்கிட்டதன் காரணமாக இந்திய அணியின் வெற்றி பறிக்கப்பட்டது. முதல் போட்டியில் ஆஸி., அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று இத்தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி சிட்னி மைதானத்தில் நடைப்பெற்று வருகின்றது.
Innings Break!
Australia 164/6 in 20 overs.
What's your prediction for the gam #AUSvIND pic.twitter.com/vTBIdmfcWc
— BCCI (@BCCI) November 25, 2018
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த ஆஸி., அணி வீரர்கள் மலமலவென ரன்களை குவிக்கத்தொடங்கினர். ஆஸி., அணி வீரர்கள் ஆர்கி சார்ட் 33(29) ஆரோன் பின்ச் 28(23) ரன்களில் வெளியேற தொடர்ந்து களமிறங்கிய கெளன் மேக்ஸ்வெல் 13(16), அலெக்ஸ் கேரி 27(19) ரன்கள் குவித்தனர். இந்திய வீரர்களின் பந்துவீச்சினை தும்சம் செய்த ஆஸி., அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் குர்ணல் பாண்டயா 4 விக்கெட்டுகளை குவித்தார்.
இதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீரர்கள் களமிறங்குகின்றனர்.