உலக கோப்பை சூப்பர் 12 போட்டிகள் இன்று முதல் தொடங்கியது. இன்று நடைபெற்ற போட்டியில் சவுத் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங் தேர்வு செய்தது.
ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியா அணி பவுலிங்கில் கலக்கியது. முதல் நான்கு ஓவரிலேயே 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது சவுத்ஆப்பிரிக்கா. மார்க்ரம் 36 பந்துகளில் 40 ரன்களை விளாசினார். கிளாசென்13, மில்லர் 16, ரபாடா 19 ரன்கள் அடிக்க சவுத் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க், ஹேசெல்வுட், சாம்பா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Australia will chase a target of 119
Will they start their campaign with a bang?#T20WorldCup | #AUSvSA | https://t.co/9nS8D6jMaw pic.twitter.com/lPxpp03l31
— ICC (@ICC) October 23, 2021
எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி ரன்கள் எடுக்க தடுமாறியது. 2-வது ஓவரிலேயே கேப்டன் பின்ச் ரன்கள் ஏதுமின்றி வெளியேறினார். ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் நிதானமாக ஆடியதால் ரன்ரேட் சரிந்தது. கடைசி இரண்டு ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் 11 ரன்கள் கிடைக்க கடைசி வரை வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக விளையாடிய ஸ்டாய்நிஸ் 19.4 பந்தில் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வென்றது.
Australia start off their #T20WorldCup 2021 campaign in style #AUSvSA | https://t.co/9nS8D6jMaw pic.twitter.com/eZWk4a2H7X
— ICC (@ICC) October 23, 2021
ALSO READ சிஎஸ்கே அணி Retention செய்ய போகும் வீரர்கள்! கசிந்த தகவல்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR