ஈடன் கார்டன் டெஸ்ட் போட்டிக்கு வாங்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணம் திரும்பி அளிக்கப்படும் என பெங்காள் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டனில் இந்தியாவுக்கும் வங்கதேச அணிக்கும் இடையே சமீபத்தில் நடைப்பெற்ற டெஸ்ட் போட்டி 3-ஆம் நாள் ஆட்டத்தோடு முடிவு பெற்றது. இந்நிலையில் இப்போட்டியில் 4-ஆம், 5-ஆம் நாள் ஆட்டத்திற்கு வாங்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணங்கள் ரசிகர்களுக்கு திருப்பி அளிக்கப்படும் என கொல்கத்தா கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த இந்த இளஞ்சிவப்பு பந்து டெஸ்ட் (இந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி) போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தாயசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (3-ஆம் நாள் முதல் அமர்வின்) அதிகாலையில் முடிவு பெற்றது. இந்நிலையில் "4-ஆம் நாள் மற்றும் 5-ஆம் நாள் டிக்கெட்டுகளுக்கான தொகையைத் திருப்பிச் செலுத்தும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. ஆக இந்த இரண்டு நாட்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்த அனைத்து ரசிகர்களுக்கு இதுகுறித்து செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கொல்கத்தா கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில்., "இந்திய மண்ணில் நடைப்பெற்ற முதல் பகல்-இரவு போட்டியின் ஏற்பாடுகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் CAB மூடப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் இடம்பெறா நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணம் திருப்பி அளிக்கப்படும்." என குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஒரு டெஸ்ட் போட்டியின் பொது விதிக்கு விதிவிலக்கு அளிப்பதாக கொல்கத்தா கிரிக்கெட் சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
"கடந்த இரண்டு நாட்களாக எந்த ஆட்டமும் விளையாடப்படாத நிலையில், டிக்கெட்டுகளின் தொகையைத் திருப்பித் தருவது எங்கள் தார்மீகக் கடமையாகும். போட்டியில் ஒரு பந்து வீசப்பட்டிருந்தால் பணத்தைத் திரும்பப் பெற முடியாது என்ற விதி இந்த போட்டிக்கு பொருந்தாது. ஏனென்றால் டிக்கெட்டுகள் தினசரி அடிப்படையில் விற்கப்பட்டன, அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொண்டுவருவதற்காக சீசன் டிக்கெட்டுகளாக அல்ல," என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இத்துடன் மூன்று நாள் டெஸ்ட் போட்டியை காண வந்த ரசிகர்களுக்கு கொல்கத்தா கிரிக்கெட் சங்கம் தனது நன்றிகளை தெரிவித்துள்ளது.