இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. தோனியின் முன்னாள் தொழில் பங்குதாரரான மிஹிர் திவாகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தோனிக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக வழக்கு பதிவு செய்தவர்களில் திவாகரின் மனைவி சௌமியா தாஸும் ஒருவர். மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனமான ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் தோனி ஒப்பந்தம் செய்து இருந்தார். இந்தியாவிலும் உலகெங்கிலும் கிரிக்கெட் அகாடமிகளை நிறுவுவதற்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. முன்னர் திவாகரும் தாஸும் தோனியிடம் கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தோனி குற்றம் சாட்டி இருந்தார். இன்னிலையில், திவாகர் கூறியதாவது: நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வருவதற்கு முன்பே, தோனியின் வழக்கறிஞர் தயானந்த் ஷம்ரா பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி எங்கள் நிருவனத்தின் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்து உள்ளோம் என்று கூறினார்.
லும் படிக்க | ஹர்திக் பாண்டியாவிற்கு நோ! டி20 அணியில் ஷிவம் துபே! பிசிசிஐ அதிரடி!
தோனி முன்பு 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூட்டாளிகள் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். கிரிக்கெட் அகாடமிகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை மதிக்காமல் சுமார் ரூ. 16 கோடி மோசடி செய்ததாக திவாகர் மற்றும் தாஸ் மீது தோனி சமீபத்தில் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். விளையாட்டு மேலாண்மை நிறுவனமான ஆர்கா ஸ்போர்ட்ஸின் மீது இந்த வழக்கை ராஞ்சியில் உள்ள கீழ் நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்தார் தோனி. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 406 (குற்றவியல் நம்பிக்கை மீறல்) மற்றும் 420 (ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் ஆர்கா ஸ்போர்ட்ஸ் இயக்குநர்கள் மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் ஆகியோருக்கு எதிராக ராஞ்சியில் உள்ள நீதிமன்றத்தில் கிரிக்கெட் வீரர் தோனி சார்பில் கிரிமினல் வழக்குத் தாக்கல் செய்யபட்டது. 2017 ஆம் ஆண்டில், தோனியின் பெயரில் உலகம் முழுவதும் கிரிக்கெட் அகாடமிகளைத் திறக்க, ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், கிரிக்கெட் அகாடமியை திறப்பது உள்ளிட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை திவாகர் கடைபிடிக்கவில்லை என்று புகார் கூறப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின்படி, ஆர்கா ஸ்போர்ட்ஸ் உரிமைக் கட்டணத்தை செலுத்தவும், குறிப்பிட்ட விகிதத்தில் லாபத்தைப் பகிர்ந்து கொள்ளவும் பொறுப்பாகும், ஆனால் அவர்கள் ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பின்பற்றவில்லை என்று மகேந்திர சிங் தோனி புகாரில் தெரிவித்துள்ளார் இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 15, 2021 அன்று கிரிக்கெட் வீரர் தோனி ஆர்கா ஸ்போர்ட்ஸிற்கான அங்கீகாரக் கடிதத்தை வாபஸ் பெற்று, நிறுவனத்திற்கு பல சட்ட நோட்டீஸ்களை அனுப்பினார். தோனியின் கிரிக்கெட் பயணத்தைப் பொறுத்த வரையில், ஐபிஎல் 2024ல் சிஎஸ்கேயை வழிநடத்தத் தயாராகி வருகிரார். கடந்த சீசனில் தோனி முழங்கால் காயத்தால் அவதிப்பட்டாலும், ஐபிஎல் 2023 முடிவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 2024 சீசனுக்காக தற்போது தீவிர பயிர்சியில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் படிக்க | லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த விராட் கோலி! வைரலாகும் சிக்ஸர் வீடியோக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ