ஐபிஎல் 2022:டெல்லியை வீழ்த்தியது சென்னை

நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான‌ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.   

Written by - க. விக்ரம் | Last Updated : May 9, 2022, 12:48 AM IST
  • டெல்லியை வீழ்த்தியது சென்னை
  • சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி
ஐபிஎல் 2022:டெல்லியை வீழ்த்தியது சென்னை title=

நேற்றைய ஐபிஎல் போட்டியில் டாஸை இழந்த சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து, 208 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டேவான் கான்வே 87 ரன்களை‌ எடுத்தார். டெல்லி பந்துவீச்சில் நோர்க்கியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

209 ரன்கள்‌ என்ற‌ கடினமான  இலக்குடன் இறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கம் சிறப்பாகவே அமைந்தது. இருப்பினும், பவர்பிளே முடிந்தபின்னர் அந்த அணியின்‌ விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. 

வார்னர், மார்ஷ், பந்த் மற்றும் சற்று ஆறுதல் அளிக்க மற்ற வீரர்கள் பெவிலியனுக்கு‌ அணி வகுத்தனர். இறுதியாக, 17.4 ஓவர்களில் 117 ரன்களில் ஆல்-அவுட்டானது. இதன்மூலம், சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கேகேஆர்‌ அணியை பின்னுக்கு தள்ளி 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News