ஐபிஎல் 2022-ன் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. மற்ற போட்டிகளை விட இந்த போட்டியின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது, காரணம் சென்னை அணியின் முக்கிய வீரராக இருந்த ஃபாஃப் டு பிளெசிஸ் தற்போது ஆர்சிபி அணியின் கேப்டனாக உள்ளார். மேலும் சென்னை அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு சிறிதளவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அந்த வகையில் இன்றைய போட்டி DY பட்டில் மைதானத்தில் நடைபெற்றது, டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
Brothers in arms! #WhistlePodu #Yellove #CSKvRCBpic.twitter.com/Pb1ybql4na
— Chennai Super Kings (@ChennaiIPL) April 12, 2022
மேலும் படிக்க | கேப்டன்சியில் தோனி தலையிடுவதாக ஜடேஜா புகார்: CSKவுக்குள் புது பூகம்பம்?!
இந்த சீசன் தொடங்கியதிலிருந்தே ருதுராஜ் கெய்க்வாட் ரன்களை அடிக்க தடுமாறி வருகிறார். அந்த வகையில் இந்த போட்டியிலும் 17 ரன்களுக்கு வெளியேறினார். எதிர்பாராதவிதமாக மொயின் அலியும் மூன்று ரன்களுக்கு ரன் அவுட்டானார். இந்தப் போட்டியிலும் சிஎஸ்கே அணி தோல்வி பெறும் என்று ரசிகர்கள் எண்ணி நிலையில் ஆட்டத்தை உத்தப்பா மற்றும் டுபே மாற்றி அமைத்தனர். இருவரும் இணைந்து ஆர்சிபி அணியின் பவுலர்களை நாலாபுறமும் சிதறடித்தனர். மைதானம் முழுவதிலும் சிக்சர் மழை பொழிந்தது. உத்தப்பா 88 ரன்களும், டுபே 95 ரன்களும் அடிக்க சிஎஸ்கே அணி 20 ஓவரில் 216 ரன்கள் குவித்தது. இதுவே இந்த சீசனில் சிஎஸ்கே அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
200+ in our 200th Match! Let's go hold the fort!#CSKvRCB #WhistlePodu #Yellove pic.twitter.com/jPX7mfu4gc
— Chennai Super Kings (@ChennaiIPL) April 12, 2022
மிகப்பெரிய இலக்கை எதிர்த்து ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஆரம்பித்திலேயே அதிர்ச்சி அளித்தனர் சிஎஸ்கே அணியின் பவுலர்கள். இந்த சீசன் முழுவதும் சிஎஸ்கே அணி பவுலிங்கில் சொதப்பிய நிலையில் பவர் பிளேயில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது. தீக்சேனாவின் சிறப்பான பவுலிங்கில் ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் அனுஜ் ராவத் விக்கெட்டை வீழ்த்தினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கோலி ஒரு ரன்னில் அவுட்டானார். அதன்பிறகு இறங்கிய ஆர்சிபி-ன் வீரர்கள் அதிரடி காட்ட, ஒருபுறம் ரன்கள் ஏறினாலும் மறுபுறம் விக்கெட்களும் விழுந்தது. வழக்கம்போல தினேஷ் கார்த்திக் கடைசி கட்டத்தில் அதிரடி காட்ட, ஸ்கோர் எகிறியது. இருந்தாலும் சிஎஸ்கே அணி வீரர்கள் விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுக்க ஆர்சிபி அணி 20 ஓவரில் 193 ரன்களுக்குச் 9 விக்கெட்டுகளை இழந்து இந்த போட்டியில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஐபிஎல் 2022-ல் தனது முதல் வெற்றியை சிஎஸ்கே அணி பதிவு செய்தது.
First win ku #WhistlePodu #CSKvRCB #Yellove pic.twitter.com/VJtaA92h22
— Chennai Super Kings (@ChennaiIPL) April 12, 2022
மேலும் படிக்க | CSKவுக்கு ஜடேஜாவைக் கேப்டனாக்குனதுதான் தப்பாம்!- சொன்னது யார் தெரியுமா!?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR