கோபா அமெரிக்கா கால்பந்து: அரை இறுதிக்கு அமெரிக்கா தகுதி

Last Updated : Jun 17, 2016, 11:15 AM IST
கோபா அமெரிக்கா கால்பந்து: அரை இறுதிக்கு அமெரிக்கா தகுதி title=

16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் அமெரிக்கா, ஈக்வேடார், பெரு, கொலம்பியா, அர்ஜென்டினா, வெனிசிலா, மெக்சிகோ, சிலி ஆகிய அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

இன்று அதிகாலை நடந்த முதல் கால் இறுதி போட்டியில் அமெரிக்கா-ஈக்வேடார் அணிகள் மோதின. ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் டெம்சே கோல் அடித்தார்.

முதல் பாதியில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது பாதி ஆட்டத்திலும் அமெரிக்காவில் ஆக்ரோஷம் தொடர்ந்தது. 65-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் சார்ட்ஸ் 2-வது கோலை அடித்தார்.

இதனால் பதில் கோல் அடிக்க ஈக்வேடார் அணி மல்லு கட்டியது. 74-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் அர்யோ கோல் அடித்தார். அதன்பின் ஈக்வேடார் அணி 2-வது கோலை அடிக்கவிடாமல் அமெரிக்க வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் அமெரிக்கா 2-1 என்ற கோல் கணக்கில் வென்று அரை இறுதிக்கு நுழைந்தது.

Trending News