மீண்டும் களத்தில் இறங்கும் யுவராஜ் சிங்? டி-20 கிரிக்கெட் விளையாட அழைப்பு

யுவராஜ் ஓய்வில் இருந்து மீண்டும் பஞ்சாபிற்காக விளையாடலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. 

Written by - ZEE Bureau | Last Updated : Sep 10, 2020, 07:49 AM IST
  • கடந்த ஆண்டு, அதாவது 2019 ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
  • 2011 ஒருநாள் உலகக் கோப்பை (2011 World Cup) வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றினார் யுவராஜ் சிங்.
  • நான் நீண்ட காலமாக பேட்டைத் தொடாதபோது கூட என்னால் சரியாக பந்தை கணித்து அடிக்க முடிந்தது.
மீண்டும் களத்தில் இறங்கும் யுவராஜ் சிங்? டி-20 கிரிக்கெட் விளையாட அழைப்பு

Cricket News: எல்லாம் திட்டத்தின் படி நடந்தால், அதிரடி வீரர் யுவராஜ் சிங் மீண்டும் இந்திய மைதானத்திற்கு திரும்ப முடியும். ஆதாரங்கள் அடிப்படையில், அவர் அடுத்த சீசனில் பஞ்சாபிற்காக டி-20 (T-20 Cricket) கிரிக்கெட்டை விளையாட முடியும். யுவராஜ் சிங் கடந்த ஆண்டு, அதாவது 2019 ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2011 ஒருநாள் உலகக் கோப்பை (2011 World Cup) வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றிய யுவராஜ் சிங் ஊரடங்கு காலத்தில் சுப்மான் கில், பிரபாசிம்ரன் சிங், அபிஷேக் சர்மா மற்றும் அன்மோல்பிரீத் சிங் ஆகியோருக்கு வீட்டில் பயிற்சி அளித்தார்.

அபிஷேக் (Abhishek Sharma), பிரபாசிம்ரன் (Prabhsimran Singh) மற்றும் அன்மோல் (Anmolpreet Singh) ஆகியோர் யுவராஜ் சிங்கின் வீட்டில் இரண்டு மாதங்கள் தங்கினர். சுப்மான் கில் (Shubman Gill) மட்டுமே தனது வீட்டிலிருந்து தினமும் யுவராஜ் வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்போதிருந்து, யுவராஜ் ஓய்வில் இருந்து மீண்டும் பஞ்சாபிற்காக விளையாடலாம் என்ற யூகங்கள் எழுந்தன. இது மட்டுமல்லாமல், யுவராஜ் சிங்கை மாநில அணியின் வீரராகவும் வழிகாட்டியாகவும் பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

38 வயதான யுவராஜ் சிங் (Yuvraj Singh) புதன்கிழமை கிரிக்பஸிடம் பேசியபோது, "இந்த இளைஞர்களுடன் நேரத்தை செலவிடுவதை நான் மிகவும் ரசித்தேன், விளையாட்டின் பல்வேறு அம்சங்களைப் பற்றி அவர்களுடன் பேசும்போது, ​​அவர்கள் வெவ்வேறு விஷயங்களை கற்றுக்கொள்ளலாம் என்று நான் உணர்ந்தேன், அதை நான் அவர்களிடம் சொன்னேன்" என்றார்.

ALSO READ |  பயிற்சியாளராக மாறிய யுவராஜ் சிங் - IPL 2020 தொடரில் பங்கேற்கும் 4 வீரர்களுக்கு பயிற்சி அளித்தார்

மீண்டும் விளையாட அணிக்கு திரும்புவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த யுவராஜ் சிங், "பயிற்ச்சி அளித்த வீரர்களுக்கு வேறு சில நுணுக்கங்களை காட்ட நான் வலையில் வேலையாட வேண்டியிருந்தது. அப்பொழுது நான் உணர்ந்தேன்.. நான் எவ்வளவு நன்றாக பந்தை அடித்தேன் என்று மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்பட்டேன். அதுவும் நான் நீண்ட காலமாக பேட்டைத் தொடாதபோது கூட என்னால் சரியாக பந்தை கணித்து அடிக்க முடிந்தது என்றார்.  லாக் டவுன் தடை நீக்கப்பட்ட பிறகு, யுவராஜ் தனது பெரும்பாலான நேரத்தை கோல்ஃப் மற்றும் டென்னிஸ் விளையாடுவதில் செலவிடுகிறார்.

யுவராஜ் கூறுகையில், "நான் அவர்களுக்கு இரண்டு மாதங்கள் பயிற்சி அளித்தேன், பின்னர் நான் ஒரு சீசன் முகாமில் பேட்டிங் செய்ய ஆரம்பித்தேன். சில பயிற்சி போட்டிகளிலும் ரன்கள் எடுத்தேன். அத்தகைய ஒரு சீசனுக்குப் பிறகு, பஞ்சாப் கிரிக்கெட் சங்க செயலாளர் புனீத் பாலி என்னை தொடர்பு கொண்டார். ஓய்வில் இருந்து வெளியே வருவதை மறுபரிசீலனை செய்வீர்களா? என்று என்னிடம் கேட்டார். '

ALSO READ |  Video: 6 பந்தில் 6 சிக்ஸ்ர்... ஆனால் இந்த முறை யுவராஜ் இல்லை...

இந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் வழக்கம் போல் சிறப்பாக பேட்டிங் செய்கிறார் என்பது புனீத் பாலியின் வாதம். யுவராஜ் ஒப்புக் கொண்டார், "ஆரம்பத்தில் நான் இதை ஏற்க விரும்புகிறேனா என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் பி.சி.சி.ஐ. (BCCI) தரப்பில் இருந்து அழைப்பு வராதவரை என்னால் தேசிய கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முடியாது. ஆனால் பாலியின் கோரிக்கையை என்னால் புறக்கணிக்க முடியவில்லை. சுமார் மூன்று அல்லது நான்கு வாரங்கள் இதைப் பற்றி யோசித்தேன் என்றார். 

More Stories

Trending News