இறந்தது டேவிட் மில்லரின் மகளா? உண்மை இதோ!

தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறுமியின் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்து உள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Oct 9, 2022, 08:41 AM IST
  • டேவிட் மில்லர் ஒரு குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.
  • அந்த குழந்தை இறந்துவிட்டதாக தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
  • இந்த புகைப்படம் நேற்றிலிருந்து வைரல் ஆகி வருகிறது.
இறந்தது டேவிட் மில்லரின் மகளா? உண்மை இதோ! title=

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் ஒரு சிறு குழந்தை இறந்துவிட்டதாக தனது சமூக ஊடகங்களில் தெரிவித்தார். உடனே அது டேவிட் மில்லரின் மகள் என்று பலர் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வந்தனர்.  ஆனால், அவர் மில்லரின் மகள் இல்லை என்றும், அந்த குழந்தை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட மில்லரின் ரசிகை என்றும் தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது. அந்த குழந்தைக்காக மில்லர் கண்ணீர் மல்க அவரது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.  

"RIP my little rockstar Love you always!," என்று அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.  முன்னதாக மில்லர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "உன்னை மிகவும் மிஸ் செய்யப் போகிறேன் மை ஸ்கட்! எனக்கு தெரிந்த நல்ல உள்ளம் நீ, எப்போதும் நம்பமுடியாத அளவிற்கு உன் முகத்தில் புன்னகையுடனும்,  ஒரு கன்னமான குறும்பு இருக்கும். உங்கள் பயணத்தில் ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு சவாலையும் ஏற்றுக்கொண்டீர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நேசிப்பதைப் பற்றி நீங்கள் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தீர்கள்! உங்களுடன் ஒரு பயணம் சென்றதற்கு நான் தாழ்மையாக உணர்கிறேன். நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன்" என்று அவர் எழுதி இருந்தார். 

miller

மேலும் படிக்க | T20 Worldcup: ரோகித்தின் மாஸ்டர் பிளான்; திடீரென ஆஸ்திரேலிய பறந்த 2 இளம் பந்துவீச்சாளர்கள்

தற்போது, ​​ஒருநாள் தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணியின் ஒரு பகுதியாக மில்லர் உள்ளார், தொடரின் இரண்டாவது போட்டி அக்டோபர் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று ராஞ்சியில் நடைபெற உள்ளது.  முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த டெம்பா பவுமாவின் தென் ஆப்பிரிக்கா அணி தற்போது தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.  இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வென்று தொடரை வெல்ல திட்டமிட்டு உள்ளனர்.

david

மேலும் படிக்க | பும்ரா இல்லை - உலகக்கோப்பையில் இந்தியாவை காப்பாற்றப்போவது யார்? - இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News