இமயமலை இலக்கை நோக்கி ஆஸி., தொடரை சமன் செய்யுமா?

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 2-வது  சதம் பூர்த்தி செய்தார் ரிஷாப் பன்ட்!

Last Updated : Jan 4, 2019, 12:36 PM IST
இமயமலை இலக்கை நோக்கி ஆஸி., தொடரை சமன் செய்யுமா? title=

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி., விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் குவிப்பு!

622 ரன்களுக்கு இந்தியா தனது முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்த நிலையில், தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியா அணி, 10 ஓவர்கள் விளையாடி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் குவித்துள்ளது.

மார்கஸ் ஹரிஸ் 19(29), உஸ்மான் குவாஜா 5(31) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.


#167.2 - Wicket! லையோன் வீசிய பந்தில் வெளியேறினார் ரவீந்திர ஜடேஜா 81(114)!

தற்போது - 167.2 ஓவர்கள் | 7 விக்கெட் | 622 ரன்கள் (முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது இந்தியா)
களத்தில் - ரிஷாப் பன்ட் 159(189)
எதிர்முனையில் - நாதன் லையோன் 4 விக்கெட் | ஹேசல்வூட் 2 விக்கெட் குவித்துள்ளனர்...


10:43 04-01-2019

ரிஷாப் பன்ட் சதத்துடன் அதிரடி ஆட்டத்தை துவங்கியது இந்தியா!

தற்போது - 159 ஓவர்கள் | 6 விக்கெட் | 555 ரன்கள்
களத்தில் ரிஷாப் பன்ட் 128(165) | ரவீந்திர ஜடேஜா 49(88)


09:59 04-01-2019

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 3-வது அரை சதம் பூர்த்தி செய்தார் ரிஷாப் பன்ட்!

தற்போது: 146 ஓவர்கள் | 6 விக்கெட் | 491 ரன்கள்
களத்தில்: ரிஷாப் பன்ட் 88(128), ரவீந்திர ஜடேஜா 25(47)


08:40 04-01-2019
129.6: WICKET! 7 ரன்களில் இரட்டை சதத்தினை தவறவிட்டார் புஜாரா 193(373)

தற்போது: 132 ஓவர்கள் | 6 விக்கெட் | 426 ரன்கள்
களத்தில்: ரிஷாப் பன்ட் 50(85), ரவீந்திர ஜடேஜா 2(6)


07:25 04-01-2019

இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை...

117 ஓவர்கள் | 5 விக்கெட் | 389 ரன்கள்
களத்தில் - புஜாரா 181(332) | ரிஷாப் பன்ட் 27(42)


ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் இறுதி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 3., துவங்கி நடைப்பெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. துவக்க வீரராக களமிறங்கிய KL ராகுல் 9(6) ரன்களுக்கு வெளியேற, மற்றொரு தொடக்க வீரரான மயங்க் அகர்வால் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 77(112) ரன்கள் குவித்தார். 

முதல் விக்கெடுக்கு களமிறங்கிய சட்டீஸ்வர் புஜாரா நிதானமாக விளையாடி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது 17-வது சதத்தினை பூர்த்தி செய்தார். ஒன் மேன் ஆர்மியாக புஜாரா அணியின் ஸ்கோரை உயர்தி வர, அவருக்கு துணையாக விராட் கோலி 23(59), ஹனுமன் விஹாரி 42(96) ரன்கள் எடுத்து வெளியேறினர். 

இதனையடுத்து நேற்றய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்தது. புஜாரா 130(250), ஹனுமன் விஹாரி 39(58) ரன்களுடன் களத்தில் இருந்தனர். 

இதனையடுத்து இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியது. பின்னர் ஆட்டத்தின் 101.6-வது பந்தில் ஹனுமன் விஹாரி 42(96), லையன் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். எனினும் மறுமுனையில் புஜாரா நிதானமாக விளையாடி அடுத்தடுத்து வரும் வீரர்களுக்கு நம்பிக்கை அளித்து வருகின்றார்.

தற்பைதைய நிலவரப்படி இந்தியா 112 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 171(316), ரிஷாப் பன்ட் 19(28) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Trending News