சாம்சன்: வில்வித்தை உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்!
துருக்கியின் சாம்சன் நகரில் வில்வித்தை உலக கோப்பை போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு ரிக்கர்வு பிரிவு வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, ஜெர்மனியின் லிசா அன்ருச்சை எதிர்கொண்டார்.
இப்போட்டியின் முதல் 5 செட்களில் இருவரும் தலா 5 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க இருவருக்கும் தலா 9 அம்புகள் வழங்கப்பட்டது. இதிலும் இருவருமே 9 அம்புகளையும் மத்திய புள்ளியை நோக்கி சரியாக செலுத்தினர்.
And it’s Deepika Kuma ho takes the bro ver Lisa a one-arrow #shootoff at the 2018 #WCFinal.
“I’m happy but I know I could have done more”#archery pic.twitter.com/kLOd66G0Fc
— World Archery (@worldarchery) September 30, 2018
எனினும் மத்திய புள்ளிக்கு மிக அருகில் அடித்த காரணத்தால், தீபிகா குமாரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டது.
வெற்றிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபிகா குமாரி தெரிவிக்கையில்... அம்பை ஏய்வதற்கு முன் பலமுறை யோசித்து பின்னரே ஏய்வேன், முடிவு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என மனதை தேற்றிக்கொண்டு தான் முயற்சிப்பேன். ஆசிய போட்டிக்கு முன்னர் நான் கடும் காய்ச்சலில் சிக்கினேன். எனது பலம் முழுவதையும் இழந்தேன். அம்பை கூட ஏந்த முடியாத நிலையில் இருந்தேன், பின்னர் 15 நாள் ஓய்வுக்கு பின்னர் இங்கு வந்துள்ளேன், என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு கொடுக்கப்படும் அங்கிகாரத்தினை மற்ற விளையாட்டுகளுக்கும் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்