'நாளை சந்திக்கிறேன்' : தோனி வைக்கும் சஸ்பென்ஸ் - எதற்காக?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, நாளை மதியம் 2 மணியளவில் நேரலையில் வந்து சில தகவல்களை பகிர்ந்துகொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்

Written by - Sudharsan G | Last Updated : Sep 24, 2022, 05:24 PM IST
  • கேப்டனாக தோனி தனது முதல் சர்வதேச கோப்பையை வென்று இன்றுடன் 15 ஆண்டுகளாகிறது.
  • தோனி தனது முக்கிய அறிவிப்புகள் அனைத்தையும் தீடீரெனவே அறிவிப்பார்.
  • தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறார்.
'நாளை சந்திக்கிறேன்' : தோனி வைக்கும் சஸ்பென்ஸ் - எதற்காக? title=

இந்திய கிரிக்கெட் அணியின் 28 ஆண்டுகால உலகக்கோப்பை பசியை தீர்த்துவைத்தவர் என்றும், இந்திய கேப்டன்களில் முக்கியமானவராகவும் கருதப்படுபவர் மகேந்திர சிங் தோனி. இவர் தலைமையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை(2007), ஒருநாள் உலகக்கோப்பை(2011), சாம்பியன்ஸ் டிராபி(2013) ஆகிய ஐசிசியின் முதன்மையான கோப்பைகளை கைப்பற்றின. அதுமட்டுமின்றி, இவரது காலகட்டத்தில் இந்திய அணியில் இளைஞர்களின் வருகை அதிகமாகி, பெரிய மாற்றத்திற்கும் உள்ளானது எனக் கூறலாம். 

ஓய்வுபெற்று 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மகேந்திர சிங் தோனி தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் நேரலையில் வர இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"நாளை (செப். 25) மதியம் 2 மணியளவில் சில உற்சாமளிக்கும் செய்திகளை நான் உங்களுடனும் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். அனைவரும் அதில் பங்கேற்பீர்கள் என நினைக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | தோனி மட்டும் தான் என்னிடம் பேசினார்: உண்மையை உடைத்த விராட் கோஹ்லி!

இதனால், அவர்களின் ரசிகர்கள் அனைவரும் குதூகலமடைந்துள்ளனர். ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரில் மட்டுமே அவரை பார்க்க முடிகிறது என ஏக்கமடைந்த ரசிகர்களுக்கு, தோனியின் இந்த அறிவிப்பு பெரும் புத்துணர்ச்சியை அளித்துள்ளது. அதுமட்டுமின்றி, சில தகவல்களை பகிர்ந்துகொள்ள இருப்பதாக தோனி குறிப்பிட்டுள்ளதும் பெரும் எதிர்பார்ரபை கிளப்பியுள்ளது.

ஜொகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்

அவரின் ஓய்வு அறிவிப்பு, கேப்டன்ஸி துறப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் சர்பரைஸாக தெரிவிப்பதே தோனியின் ஸ்டைல். அப்படியிருக்க, நாளைக்கு நேரலையில் வரப்போதை அறிவித்து, அதில் முக்கியமான தகவலையும் அளிக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

JSK

மேலும், தென்னாப்பிரிக்க டி20 லீக் ஜொகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என்ற அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இந்த தொடர் வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது. ஜொகனஸ்பர்க் அணிக்கு தோனி பயிற்சியாளராக செல்லலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. சிஎஸ்கே உரிமையாளரான இந்தியன் சிமெண்ட்ஸ் நிர்வாகத்துடன் தோனிக்கு நல்ல இணக்கமாக இருப்பதால், அவர் ஜொகனஸ்பர்க் அணிக்கு பயிற்சியாளராக செல்லும் வாய்ப்பு அதிகம் என்ற தெரிகிறது. இதுகுறித்த தகவலை கூட நாளை தோனி பகிர வாய்ப்புள்ளது. 

2007, செப்.24ஆம் தேதிதான், தென்னாப்பிரிக்காவின் ஜொகனஸ்பர்க் நகரில் தான் தோனி தலைமையிலான இந்திய அணி, டி20 உலகக்கோப்பையை வென்றிருந்தது. கேப்டனாக அவரின் முதல் சர்வதேச கோப்பையை கைகளில் ஏந்தி, இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Dhoni

சேப்பாக்கில் கடைசி போட்டி

2020ஆம் ஆண்டு ஆக.15ஆம் தேதி அன்று சர்வதேச போட்டிகளில் ஓய்வுபெறுவதாக தோனி அறிவித்தார். தற்போது சென்னை அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்து வருகிறார். கடந்தாண்டு, சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி திடீரென விலகினார். தொடர்ந்து, ஜடேஜாவுக்கு அந்த பொறுப்பு கொடுக்கப்பட்ட நிலையில், ஒரு சில காரணங்களுக்காக மீண்டும் தோனிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும், வரும் 2023 ஐபிஎல் தொடரிலும் அவரே கேப்டனாக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா கட்டுப்பாடுகளால், கடந்த இரண்டு தொடர்களும், சென்னையில் நடைபெறாமல் இருந்தது. இந்தாண்டு ஐபிஎல் சென்னையில் நிச்சயம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை ரசிகர்களின் முன்னிலையில்தான் தனது கடைசி போட்டி அமையவேண்டும் என தோனி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

MSD

மேலும் படிக்க | ஓய்வை அறிவித்து 2 ஆண்டுகள் நிறைவு! தோனியின் எதிர்கால குறிக்கோள்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News