Euro 2020: 55 ஆண்டு கால காத்திருப்புக்கு பின் யூரோ கால்பந்து இறுதியில் இங்கிலாந்து

யூரோ கோப்பை கால்பந்துத் தொடரின் அரையிறுதி போட்டியில் 2:1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, வரலாற்றில் முதல்முறையாக யூரோ கால்பந்துப் போட்டித்தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 8, 2021, 02:49 PM IST
  • யூரோ கோப்பை கால்பந்துத் தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து
  • வரலாற்றில் முதல்முறையாக யூரோ கால்பந்துப் போட்டித்தொடரின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து
  • 2:1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் டென்மார்க்கை தோற்கடித்தது இங்கிலாந்து அணி
Euro 2020: 55 ஆண்டு கால காத்திருப்புக்கு பின் யூரோ கால்பந்து இறுதியில் இங்கிலாந்து title=

55 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு படைத்த இங்கிலாந்து கால்பந்து அணி, டென்மார்க்கை வீழ்த்தி யூரோ 2020 கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.
2:1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, ஆக்ரோஷமாக ஆடிய டென்மார்க்கின் ஆவலை அடக்கிவிட்டது.

வரலாற்றில் முதல்முறையாக யூரோ கால்பந்துப் போட்டித்தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து. வெம்பிலி-யில் (Wembley) நடைபெர்ற யூரோ கோப்பை கால்பந்து இரண்டாம் அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து வீரர் ஹாரி கேனின் எக்ஸ்ட்ரா டைம் கோல் மூலம் டென்மார்க்கை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து.

1966-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பிறகு முதல் முறையாக பெரிய தொடர் ஒன்றில் இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு கோல் என்று சமநிலையில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. அதில் பெனால்டி கிக்கை டென்மார்க் கோல் கீப்பர் தடுக்க முயன்றபோது, திரும்பி வந்த பந்தை இங்கிலாந்தின் ஹாரி கேன் கோலாக மாற்றினார். எனவே 2க்கு 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்று 55 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய கால்பந்து தொடரின் இறுதிக்குள் கால்வைத்துள்ளது.

ஞாயிறன்று நடைபெறும் யூரோ கால்பந்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி, இத்தாலி அணியை எதிர்கொள்கிறது. பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தயாராகிவருகின்றன.

ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 24 நாடுகளின் அணிகள் கலந்து கொண்ட யூரோ கால்பந்து தொடர் ஜூன் மாதம் 11ஆம் தேதியன்று தொடங்கியது.

கால்பந்து விளையாட்டில் உலகக் கோப்பைக்கு பிறகு மிகப் பிரபலமான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (EURO) போட்டித்தொடர், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். ஆனால், கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக யூரோ கோப்பை போட்டிகள் ஒத்திப்போடப்பட்டன.  

Also Read | Dhoni-ன் பிறந்தநாளுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு சிக்ஸர் வாழ்த்து

16ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, இத்தாலியின் ரோம் நகரில் கடந்த மாதம் 11ஆம் தேதியன்று தொடங்கியது. இறுதிப்போட்டி இம்மாதம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறுகிறது.

வழக்கத்துக்கு மாறாக, வரலாற்றில் முதல்முறையாக இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க் உள்பட நாடுகளில் நடைபெறுகிறது. பொதுவாக ஒரு நாட்டில் மட்டுமே போட்டிகள் நடைபெறும். 24 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் மொத்தம் 51 ஆட்டங்களில் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகிறது.

இறுதிப்போட்டியில் பட்டத்தை வெல்லும் அணிக்கு 89 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இந்த ஆண்டு கோப்பையை வெல்வது இங்கிலாந்தா? இத்தாலியா?

Also Read | MS Dhoni Birthday: என்றும் தோள் கொடுக்கும் தோழன் நீ - தோனி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News