’ஜார்வோ 69’ நியாபகம் இருக்கா? இந்திய அணிகாக களமிறங்கியவர் - வைரல் வீடியோ

இந்திய அணி கடந்த முறை இங்கிலாந்து சென்றபோது, மைதானத்தில் இறங்கி அலப்பறை செய்தவர் தான் இந்த ஜார்வோ 69.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 1, 2022, 05:24 PM IST
  • கடந்த முறை மைதானத்தில் அலப்பறை செய்த ஜார்வோ
  • இந்த முறையும் வருவாரா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பு
  • இந்திய அணிக்காக களமிறங்கினார் ஜார்வோ
’ஜார்வோ 69’ நியாபகம் இருக்கா? இந்திய அணிகாக களமிறங்கியவர் - வைரல் வீடியோ title=

கிரிக்கெட் மைதானத்தில் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமே இருக்காது. போட்டியைக் கடந்து மைதானத்தில் ரசிகர்கள் செய்யும் ரகளை மற்றும் அலப்பறைகள் எப்போதும் காமெடி மெட்டீரியல் தான். அந்த வகையில் இந்திய அணியின் கடந்த இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது, பல மறக்க முடியாத சம்பவங்கள் அரங்கேறின. அதில் ஒன்று தான் இந்த ’ஜார்வோ 69’. 4 டெஸ்ட் போட்டிகளில் 3 போட்டிகளை நேரில் பார்க்க வந்த அவர், செய்த அட்டகாசங்கள் ஏராளம்.

மேலும் படிக்க | அடித்தது அதிர்ஷ்டம்! இந்திய அணிக்கு கேப்டனான தினேஷ் கார்த்திக்

’ஜார்வோ 69’ என்ற பெயர் வைத்துக் கொண்ட அவர், இந்திய அணியின் ஜெர்சியைப் அச்சுஅசலாக அடித்துக் கொண்டு மைதானத்துக்கு வந்தார். திடீரென ஒரு போட்டியில் மைதானத்துக்குள் பந்தை எடுத்துக் கொண்டு ஓடி வந்து பந்துவீச சென்றார். மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த பிளேயர்கள் எல்லாம் உடனே ஷாக்காவிட்டார்கள். யாருப்பா இது? புதுசா இருக்கான். என்னமோ செய்கிறான் என இங்கிலாந்து வீரர்களே வியந்து பார்த்தனர். இந்திய வீரர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. உடனே பாதுகாப்பு அதிகாரிகள் ஓடிவந்து அவரை இழுத்துச் சென்று வெளியே விட்டனர்.

ஜார்வோவின் நடிவடிக்கையால் போட்டி சிறிதுநேரம் தடைபட்டாலும், அனைவரும் சிரித்து  மகிழ்ந்தனர். இதற்கு மேல் வரமாட்டார் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அடுத்த போட்டியில் பேட்டிங் இறங்கிவிட்டார். இது என்னடா? புது தலைவலியா இருக்கு என அம்பயர்கள் மற்றும் மைதான ஊழியர்கள் எல்லாம் நினைத்தாலும், ரசிகர்களுக்கு பெரிய என்டர்டெயின்மென்டாக இருந்தது. இதற்கு அடுத்து இந்திய அணிக்காக பீல்டிங் களமிறங்கியபோது தான் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, மைதானம் பக்கமே வரக்கூடாது என காவல்துறை எச்சரித்து அனுப்பியது.

ஆனால், அந்த ஜார்வோ இப்போது நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கு வருவாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். வருவாரா? ஜார்வோ என பொறுத்திருந்து பார்ப்போம்!

மேலும் படிக்க | இங்கிலாந்தில் வரலாறு படைக்குமா இந்தியா? பும்ராவுக்கு காத்திருக்கும் சவால்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News