FIFA World Cup 2018: அர்ஜெண்டினாவை வீழ்த்தி குரோஷியா வெற்றி!

உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் அர்ஜெண்டினா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா வீழ்த்தியது!  

Last Updated : Jun 22, 2018, 08:25 AM IST
FIFA World Cup 2018: அர்ஜெண்டினாவை வீழ்த்தி குரோஷியா வெற்றி! title=

ரஷ்யாவில் நடைபெற்ற 21-வது உலக கோப்பை கால்பந்து 'டி' பிரிவு லீக் போட்டியில் அர்ஜெண்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதின. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றுள்ளது.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தனது முயற்சிகளை கைவிட்டனர். இதையடுத்து, இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய குரோஷியா அணியினருக்கு கைமேல் பலன் கிடைத்தது. அவரை தொடர்ந்து, அந்த அணியின் சார்பில் விளையாடிய ஆன்டி ரெபிக்(53வது நிமிடம்), லுகா மோட்ரிக்(80வது நிமிடம்), இவான் ராகிடிச்(901வது நிமிடம்) தொடர்ந்து கோல் அடித்து அசத்தினர்.

இதையடுத்து, தொடர்ந்து இரு அணிகளும் மாறி மாறி கோல் போடா முற்றுகையிட்ட போதும், அர்ஜெண்டினா அணியினரால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் குரோஷியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

Trending News