FIFA World Cup 2022 : காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மோதப்போவது யார் யார்? - முழு விவரம்

பிபா உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், ரவுண்ட் ஆப் 16 சுற்று இன்று முதல் தொடங்குகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 4, 2022, 11:31 AM IST
  • நேற்றைய போட்டிகளில் போர்ச்சுகல், பிரேசில் அணிகள் அதிர்ச்சி தோல்வி.
  • இன்று முதல் ரவுண்ட் ஆப் 16 சுற்றுகள் தொடக்கம்.
FIFA World Cup 2022 : காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மோதப்போவது யார் யார்? - முழு விவரம் title=

கத்தார் நாட்டில் கடந்த நவ. 20ஆம் தேதியில் இருந்து பிபா உலகக்கோப்பை 2022 தொடர் நடைபெற்று வருகிறது. குரூப் சுற்றில் 32 அணிகள், ஒரு குரூப்புக்கு 4 அணிகள் வீதம், 8 குரூப் பிரிக்கப்பட்டன. இதில், குரூப்பில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், காலிறுதிக்கு முந்தைய சுற்றான, ரவுண்ட் ஆப் 16இல் மோதிக்கொள்ளும். 

இந்நிலையில், பிபா உலகக்கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் நேற்றோடு முடிந்தது. இதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளான அர்ஜென்டீனா, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுகல், பிரேசில் ஆகிய அணிகள் குரூப் சுற்றில் தலா 1 தோல்வியை சந்தித்துள்ளன. ஆனால், ஜெர்மனியை தவிர மேல குறிப்பிட்ட மற்ற அணிகள் அனைத்தும் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றவிட்டன.

குரூப் சுற்றில், எந்த ஒரு அணியும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை. நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் மட்டும் இரண்டு போட்டிகளை வென்று, ஒரு போட்டி டிரா செய்தது. அமெரிக்கா ஒரு போட்டியை வென்று இரண்டு போட்டிகளை டிரா செய்தது. இந்த மூன்று அணிகள் மட்டுமே குரூப் சுற்றுகளில் தோல்வியே காணாத அணிகளாகும். 

மேலும் படிக்க | Video : டீ-சர்ட்டை கழட்டிய வீராங்கனை... ரொனால்டோ மீதான ஈர்ப்பால் செய்த செயல்

ரவுண்ட் ஆப் 16க்கு தகுதிபெற்ற அணிகள்

நெதர்லாந்து, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், போலந்து, இங்கிலாந்து, செனகல், ஜப்பான், குரோஷியா, பிரேசில், தென் கொரியா, மொராக்கோ, ஸ்பெயின், போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து.

ரவுண்ட் ஆப் 16 பலப்பரீட்சை (அனைத்தும் இந்திய நேரப்படி)

  • நெதர்லாந்து vs அமெரிக்கா - இன்று (டிச. 3) இரவு 8.30 மணிக்கு. 
  • அர்ஜென்டினா vs ஆஸ்திரேலியா - நாளை (டிச. 4) நள்ளிரவு 12.30 மணிக்கு. 
  • பிரான்ஸ் vs போலந்து - நாளை (டிச. 4) இரவு 8.30 மணிக்கு.
  • செனகல் vs இங்கிலாந்து - நாளை மறுதினம் (டிச. 5) நள்ளிரவு 12.30 மணிக்கு.
  • ஜப்பான் vs குரோஷியா -  நாளை மறுதினம் (டிச. 5) இரவு 8.30 மணிக்கு.
  • தென் கொரியா vs பிரேசில் - டிச.6 நள்ளிரவு 12.30 மணிக்கு. 
  • மொராக்கோ vs ஸ்பெயின் - டிச. 6 இரவு 8.30 மணிக்கு 
  • போர்ச்சுகல் vs சுவிட்சர்லாந்து - டிச. 7 நள்ளிரவு 12.30 மணிக்கு.

இப்போட்டிகள் அனைத்தையும் ஜியோ சினிமா ஆப் மூலம் நேரலையில் காணலாம். இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறும். தோல்வி பெறும் அணிகள் நேரடியாக வெளியேறும். 

மேலும் படிக்க | FIFA: கால்பந்து வீரரை சுட்டுத் தள்ளிய இரான் பாதுகாப்புப்படைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News