பேட்டிங்கில் கவனம் செலுத்துங்கள் விராட் - முன்னாள் பாகிஸ்தான் வீரர் காட்டம்!

விராட் கோலிக்கு அனில் கும்ப்ளேவுடன் பிரச்சனை, இப்போது சவுரவ் கங்குலியுடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Dec 24, 2021, 01:20 PM IST
  • கும்ப்ளே மற்றும் கங்குலி தான் இந்திய கிரிக்கெட்டின் உண்மையான தூதர்கள்.
  • விராட் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ரன்களை அடிக்க சிரமப்படுகிறார்.
பேட்டிங்கில் கவனம் செலுத்துங்கள் விராட் - முன்னாள் பாகிஸ்தான் வீரர் காட்டம்! title=

விராட்டுக்கு அனில் கும்ப்ளேவுடன் பிரச்சனை, இப்போது கங்குலியுடன் பிரச்சனை. கும்ப்ளே மற்றும் கங்குலி கிரிக்கெட்டில் தங்களை நிரூபித்துள்ளனர்.  அவர்கள் தான் இந்திய கிரிக்கெட்டின் உண்மையான தூதர்கள். இந்திய கிரிக்கெட்டை மாற்றி அமைத்த கங்குலிக்கு எதிராக விராட் பேசுவது சரியில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கனேரியா தெரிவித்துள்ளார்.

ALSO READ | பிரச்சனைகளுக்கு மத்தியில் விராட் கோலியை பாராட்டிய கங்குலி!

வேகப்பந்து வீச்சாளர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் இம்ரான் கான் ஆகியோருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள கனேரியா, சமீபத்தில் அளித்த பேட்டியில், விராட் கோலி தேவையற்ற சர்ச்சைகளைத் தூண்டுவதை விட தனது ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. எனவே அவர் தனது ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். சவுரவ் கங்குலி போன்ற ஜாம்பவான்களுக்கு எதிராக பேசுவது அவருக்கு என்றுமே உதவப் போவதில்லை.  இந்திய கிரிக்கெட்டை கங்குலி மற்றும் தோனி மாற்றி அமைத்துள்ளனர். விராட்டின் செய்தியாளர் சந்திப்பு இந்த நேரத்தில் உண்மையில் தேவையில்லாத ஒன்று.

kaneria

விராட் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ரன்களை அடிக்க சிரமப்படுகிறார். ஒரு கேப்டனாக, அவர் எந்த ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை, அதனால் எல்லாமே அவருக்கு எதிராக நடக்கிறது.  ரோஹித் ஷர்மாவைப் பொறுத்த வரையில் சிறந்த வீரராக இருந்து வருகிறார்.  அவர் ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். அவரது கேப்டன்ஷிப்பே அசாத்தியமானது; ராகுல் டிராவிட்டுடனான அவரது தோழமை அற்புதமாக உள்ளது.  கும்ப்ளே, கங்குலி, டிராவிட் கிரிக்கெட்டில் பெரிய அந்தஸ்து பெற்றவர்கள்.  அவர்களின் விளையாட்டு அற்புதமாக இருக்கும்.  

virat

தற்போது இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, கே.எல். ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், மயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சால் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.  ரிஷப் பந்த் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால், கே.எஸ்.பாரத் மற்றும் விருத்திமான் சாஹா ஆகியோர் தயாராக உள்ளனர் என்று கனேரியா கூறினார்.

ALSO READ | ஐபிஎல் 2022 போட்டிகள் தள்ளிவைப்பா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News