அதிரடி நாயகன் ஹார்திக் பாண்டயாவை புகழும் ஸ்டீவ் வாக்...

இந்திய கிரிகெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டயா, நடப்பு உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்!

Updated: Jun 12, 2019, 06:19 PM IST
அதிரடி நாயகன் ஹார்திக் பாண்டயாவை புகழும் ஸ்டீவ் வாக்...

இந்திய கிரிகெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டயா, நடப்பு உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்!

சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய போட்டியில் இந்தியா 352 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் அதிரடி நாயகன் ஹார்திக் பாண்டயா 27 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உள்பட 48 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றிச்சென்றார். இவரது ஆட்டித்தினை பார்த்து புகழ்ந்துள்ள ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வாக்., "1999 உலக கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா வீரர் லான்ஸ் குளூசெனர் படைத்த சாதனைகளை ஹார்திப் பாண்டயா தற்போது நினைவு படுத்துகின்றார்" என குறிப்பிட்டுள்ளார்.

1999 உலக கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா வீரர் லான்ஸ் குளூசெனர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதை பெற்றார். 122.17 ஸ்ட்ரைக் ரேட்டில் 281 ரன்கள் குவித்த குளூசெனர் சாதனை இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி எதிரணி சுழற்பந்து வீச்சாளர்களை அச்சுறுத்துவதில் பாண்டையா குளூசெனரை மிஞ்சிவிட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஆட்டத்தின் வெற்றியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலியும் பாண்டயா குறித்து புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. தான் எந்த தொடரில் விளையாட்டிக்கொண்டு இருக்கின்றோம் என்பதை சற்றும் நினைக்காமல், எப்போது தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஹார்திக் பாண்டயா எங்கள் அணியின் முதுகெலும்பு. அவரது ஆட்டம் பல முறை எங்கள் அணிக்கு வெற்றியையும், பெருமையும் பெற்று தந்துள்ளது என குறிப்பிட்டு இருந்தார்.

தான் எவ்வாறு ஆடுகிறோம் என்பதை நன்கு உணர்ந்து ஆட்டதின் போக்கை மாற்றும் திறன் கொண்ட ஹார்திக்கின் இயல்பான ஆட்டமே அவரது பலம் எனவும் கோலி பெருமிதம் தெரிவித்து இருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த IPL தொடரிலும் சரி, உள்ளூர் போட்டிகளிலும் சரி பாண்டையாவின் ஆட்டம் சிறப்பானதாக இருந்து வருகின்றது எனவும் விராட் கோலி பெருமிதம் தெரிவித்தார்.