ODI உலகக் கோப்பை 2023: அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் இலவசமாக பார்ப்பது எப்படி?

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அதிகாரப்பூர்வமாக நாளை தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருக்கும் நிலையில், அனைத்து போட்டிகளையும் எங்கு? எப்படி இலவசமாக பார்க்கலாம்? என்பதை தெரிந்து கொள்வோம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 4, 2023, 01:38 PM IST
  • உலக கோப்பை 2023 நேரலை
  • எங்கு இலவசமாக பார்க்கலாம்
  • நாளை போட்டி தொடங்குகிறது
ODI உலகக் கோப்பை 2023: அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் இலவசமாக பார்ப்பது எப்படி? title=

ஐசிசி 13வது ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கு முன்பு 1987, 1996 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை இந்தியா நடத்தியது. இருப்பினும், அந்த தொடர் மற்ற நாடுகளுடன் இணைந்து நடத்தப்பட்டது. ஆனால் இப்போது நடத்தப்படும் ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியா முதல் முறையாக தனியாக நடத்துகிறது. 

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2019 இறுதிப் போட்டியாளர்களான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான நடைபெறும் மோதலுடன் ஐசிசி உலக கோப்பை 2023 அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. அக்டோபர் 5 ஆம் தேதியான நாளை இந்தப் போட்டி நடைபெறுகிறது. லீக் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும். பங்கேற்கும் பத்து நாடுகளும் மற்ற ஒன்பது அணிகளுடன் ஒரு முறை மோதும். அதன்பிறகு முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

மேலும் படிக்க | உலகக் கோப்பை உடன் 10 கேப்டன்கள்... இன்று நேரலையை எங்கு, எப்போது பார்ப்பது?

2023 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி நவம்பர் 15 அன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும். இரண்டாவது அரையிறுதி ஒரு நாள் கழித்து கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடைபெறும். போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போது நடப்பு சாம்பயினாக இங்கிலாந்து அணி இருக்கிறது. கடந்த முறை இங்கிலாந்தில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை இருமுறை டை செய்து, சிக்சர்களின் அடிப்படையில் கோப்பை அந்த அணிக்கு கொடுக்கப்பட்டது. 

ICC ODI உலகக் கோப்பை 2023: இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு விவரம்: 

இந்தியாவில் நடைபெறும் ICC ODI உலகக் கோப்பை 2023-ன் நேரடி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. எனவே, போட்டியின் அனைத்து விளையாட்டுகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் நேரடியாகக் கிடைக்கும். பகல் நேர ஆட்டங்கள் இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்கும், பகல்-இரவு போட்டிகள் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கும்.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஹிந்தி எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடம் ஆகிய சேனல்களில் பார்க்கலாம்.

செயலியில் பார்ப்பவர்கள், 2023 ODI உலகக் கோப்பையின் நேரடி ஸ்ட்ரீமிங் இந்தியாவில் Disney + Hotstar ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் கண்டு ரசிக்கலாம். அனைத்து போட்டிகளும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் செயலியில் இலவசமாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.

மேலும் படிக்க | இந்த உலகக் கோப்பையை தூக்கப்போகும் கேப்டன் இவர்தான்... பிரபல ஜோசியரின் பக்கா கணிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News