ICC T20 World Cup final, Pakistan vs England : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடக்க உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்லது.
இந்நிலையில், மெல்போர்னில் தொடர் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை நிலவரம் தெரிவிக்கிறது . மேலும், போட்டி நடைபெறும் நேரத்தில், 100 சதவீத மழைக்கு வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இன்றைய போட்டி முழுவதுமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
"மெல்போர்னில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது, 10-20 மி.மீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்கக்ப்படுகிறது. மேகமூட்டம் அதிகமாக காணப்படுவதால், நண்பகல், மதிய வேளைகளில் மழைக்கு அதிக வாய்ப்புள்ளது. வடக்கு நோக்கி காற்று மணிக்கு 25 முதல் 35 கி.மீ வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வடக்கில் இருந்து வடமேற்கில் மணிக்கு 15 முதல் 20 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது" என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | ICC T20 world cup - PAK vs ENG : 2ஆவது முறையாக கோப்பையை வெல்லப்போவது யார்...?
இன்றைய போட்டி முழுமையாக பாதிக்கப்பட்டால், 'ரிசரவ் டே' ஆன நாளைக்கு போட்டி ஒத்திவைக்கப்படும். இருப்பினும், நாளைக்கும் இன்றை போன்றே, 100 மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. போட்டி நடைபெறும் நேரத்தில் அதிக மேகமூட்டங்கள் காணப்படுவதாகவும், காற்றும் பலமாக வீசும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில், மழையால் பல அணிகளுக்கு பாதிக்கப்பட்டுள்ளன. இறுதிப்போட்டியில் நுழைந்த இங்கிலாந்து அணியே, மழை காரணமாக அயர்லாந்திடம் டக்-வர்த் லீவிஸ் முறையில் தோல்வியடைந்தது. அதேபோன்று, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உடனான இங்கிலாந்தின் போட்டி மழையால் முழுவதுமாக
கைவிடப்பட்டது.
இந்த தொடரில், ரிசர்வே நாளில் மழை பெய்தால், கூடுதலாக 4 மணிநேரங்களை ஒதுக்கி ஐசிசி விதிமுறை மாற்றியுள்ளது. பொதுவாக, கூடுதலாக 2 மணிநேரம்தான் ஒதுக்கப்படும். இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,"நாக் அவுட் சுற்றில், ஒரு போட்டியை நடத்த ஒரு அணிக்கு 10 ஓவர்கள் தேவை என்பதையும், திட்டமிடப்பட்ட போட்டி நாளில் போட்டியை முடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.
ஞாயிற்றுக்கிழமை (அதாவது இன்று) போட்டி நிறைவடைய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். தேவையான ஓவர்கள் குறைக்கப்படும். தேவையான குறைந்தபட்ச ஓவர்களை ஞாயிற்றுக்கிழமை வீச முடியாவிட்டால் மட்டுமே போட்டி ரிசர்வ் நாளுக்குள் செல்லும். ரிசர்வ் நாளில் ஆட்டம் மதியம் 3 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) தொடங்கும் மற்றும் திட்டமிடப்பட்ட போட்டி நாளில் இருந்து ஆட்டத்தின் தொடர்ச்சியாக இருக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ