ICC T20 World Cup - IND vs SA : இந்தியா பேட்டிங்... பிளேயிங் லெவனில் மாற்றம்!

டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 30, 2022, 04:40 PM IST
ICC T20 World Cup - IND vs SA : இந்தியா பேட்டிங்... பிளேயிங் லெவனில் மாற்றம்! title=

ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ரூப் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்த நிலையில், சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில், இரண்டாவது பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கான போட்டிகள் இன்று நடைபெற்றது. 

அதன்படி, இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு நடைபெற்ற ஜிம்பாப்வே - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான போட்டியில், வங்கதேச அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, மதியம் நடந்த பாகிஸ்தான் - நெதர்லாந்து போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. 

மேலும் படிக்க | IND vs SA : 28 ரன்கள் போதும்... விராட் கோலி செய்யப்போகும் சாதனை!

இந்நிலையில், இன்றைய மூன்றாவது போட்டியாக இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் போட்டி பெர்த் மைதானத்தில் தற்போது தொடங்கியுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளிலும் தலா 1 மாற்றத்தை செய்துள்ளன. இந்திய அணியை பொறுத்தவரை அக்சர் படேலுக்கு பதிலாக தீபக் ஹூடாவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஷம்ஸிக்கு பதில் இங்கிடி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

தென்னாப்பிரிக்கா: குயின்டன் டி காக், டெம்பா பவுமா(கேப்டன்), ரிலீ ரோசோவ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்க்கியா

மேலும் படிக்க | 2023 ஏலத்தில் ஜடேஜா உட்பட CSK கழட்டிவிடப்போகும் 3 முக்கிய வீரர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News