அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான்? உலக கோப்பையில் புதிய ட்விஸ்ட்!

ICC World Cup 2023: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Nov 8, 2023, 08:11 AM IST
  • அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலியா.
  • 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • ஆப்கானிஸ்தானுக்கு இன்னும் ஒரு போட்டி உள்ளது.
அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான்? உலக கோப்பையில் புதிய ட்விஸ்ட்! title=

ICC World Cup 2023: உலக கோப்பை 2023 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  லீக் ஆட்டங்கள் கிட்டத்தட்ட முடிய உள்ளது.  கடந்த மாதம் தொடங்கிய உலக கோப்பை போட்டிகள் பலவித திருப்பங்களுடன் சென்று கொண்டுள்ளது.  இந்தியா, சவுத் ஆப்பிரிக்கா அணிகள் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்து கொண்ட நிலையில், நேற்று ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவில் ஆஸ்திரேலியா 3வது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.  மேக்ஸ்வெல்லின் அதிரடியில் ஆஸ்திரேலியா அணி தகுதி பெற்றுள்ளது.  ஆப்கானிஸ்தான் கையில் இருந்த போட்டியை, தனது அசாத்தியமான ஆட்டத்தால் தனி ஆளாக 200 ரன்கள் அடித்து வெற்றி பெற செய்துள்ளார் மேக்ஸ்வேல். 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 91/7 என்ற நிலையில் தத்தளித்தது. இருப்பினும், க்ளென் மேக்ஸ்வெல் தனது அணியைக் காப்பாற்ற ஆட்டமிழக்காமல் 201 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், தற்போது 4வது அணியாக யார் அரையிறுதிக்கு தகுதி பெற போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

மேலும் படிக்க | IND vs AUS: ரோஹித், கோலி, கில் நீக்கம்! ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இந்திய அணி!

அரையிறுதியில் 4வது இடத்திற்கு 3 அணிகள் போட்டி போடுகின்றன.  பங்களாதேஷ், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஸ்ரீலங்கா அணிகள் வெளியேறியுள்ள நிலையில், பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய போட்டி போடுகின்றனர்.  ஆஸ்திரேலியா அணியுடனான போட்டியில் வெற்றி பெற்று இருந்தால் ஆப்கானிஸ்தான் கனவு கொஞ்சம் நினைவாகி இருக்கும்.  இருப்பினும், தற்போதும் வாய்ப்புள்ளது.  இந்த நிலையில், அரையிறுதி போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.  நவம்பர் 11 ஆம் தேதி கொல்கத்தாவில் பாகிஸ்தான் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. நியூசிலாந்து தனது 9வது போட்டியில் இலங்கைக்கு எதிராக நவம்பர் 9 ஆம் தேதி விளையாடுகிறது. இந்த இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றும், நியூஸிலாந்து தோல்வியும் அடைந்தால், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானுக்கு 10 புள்ளிகள் கிடைக்கும்.

பின்பு, நவம்பர் 10ம் தேதி நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தினால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெரும். ஆனால், தென்னாபிரிக்காவிற்கு எதிராக ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், இரு அணிகளும் 10 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும், பின்னர் இரு அணிகளுக்கான நிகர ரன் ரேட் (NRR) படி அரையிறுதிக்கு முன்னேறும்.  ஒருவேளை, இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்று, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆட்டத்தில் மழை பெய்தால், நியூஸிலாந்து இந்தியாவுடன் அரையிறுதியில் விளையாடும்.  ஒருவேளை, ஆப்கானிஸ்தான் அணி கடைசி போட்டியில் தோல்வி அடைந்தால், அந்தச் சூழ்நிலையில், NRR படி நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் தகுதி பெரும்.

இந்திய அணி தனது ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.  இந்த போட்டியின் முடிவுகள் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.  இந்தியா வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும்.  இதனால் நெதர்லாந்து போட்டியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, பெஞ்சில் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

மேலும் படிக்க | இந்த இந்திய வீரர்களுக்கு ஓய்வு? - அணியில் முக்கிய வீரர் - அடுத்த போட்டியில் நிறைய மாற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News