Ind vs Aus T20 3வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் புதிய சாதனை

விராட் கோஹ்லி தலைமையிலான  இந்திய அணி இன்று நடைபெறவிருக்கும் மூன்றாவது டி-20 (T20) போட்டி அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டி20 (T20) போட்டிக்கு தங்களை ஊக்குவிப்பதற்கான ஒரு நல்ல செய்தி இது. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், அது பாகிஸ்தான் அணியின் வெற்றிகளை சமன் செய்துவிடும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 8, 2020, 09:02 AM IST
  • இந்தியா டி-20 போட்டிகளில் தொடர்ந்து 9 வெற்றிகளை பெற்றுள்ளது
  • ஆப்கானிஸ்தான் டி-20 போட்டிகளில் தொடர் வெற்றிகளை அதிகமாக பெற்றுள்ளது
  • பாகிஸ்தானை முந்திச் செல்ல இன்றைய வெற்றி இந்தியாவுக்கு அவசியம்
Ind vs Aus T20 3வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் புதிய சாதனை title=

விராட் கோஹ்லி தலைமையிலான  இந்திய அணி இன்று நடைபெறவிருக்கும் மூன்றாவது டி-20 (T20) போட்டி அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டி20 (T20) போட்டிக்கு தங்களை ஊக்குவிப்பதற்கான ஒரு நல்ல செய்தி இது. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், அது பாகிஸ்தான் அணியின் வெற்றிகளை சமன் செய்துவிடும்.

இதுவரை பாகிஸ்தான் அணி தான், பெரும்பாலான சர்வதேச T20 போட்டிகளில் வெற்றிபெற்ற அணியாக இருக்கிறது.இன்றைய T20 போட்டியில் ஆஸ்திரேலியாவை (Australia) வென்றால், இந்திய அணி தனது பரம எதிரிகளை கடந்து செல்ல முடியும். ஆஸ்திரேலியாவை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்துவதோடு, இந்தியாவின் கனவும் நிறைவேறும்.     

டி-20 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்ற அணிகளின் பட்டியலில் பாகிஸ்தானும், இந்தியாவும் தலா ஒன்பது வெற்றிகளைப் பெற்று, இரு அணிகளும் மூன்றாவது இடத்தில் உள்ளன. நம்பர் 1 மற்றும் 2ஆம் இடத்தில் ஆப்கானிஸ்தான் அணி இருக்கிறது. ஆப்கன் அணி 2018-19 ஆம் ஆண்டில் 12 ஆட்டங்களில் ஆட்டமிழக்காமல் இருந்த சாதனையை செய்து முதலிடத்தைப் பெற்றது.

தற்போது, மூன்று முறை ஜிம்பாப்வே, நான்கு முறை பங்களாதேஷ், ஐந்து போட்டிகளில் அயர்லாந்தையும் ஆப்கானிஸ்தான் (Afghanistan) வீழ்த்தி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதுமட்டுமல்ல 2016-17ல் தொடர்ந்து 11 ஆட்டங்களில் ஆட்டமிழக்காமல் இருந்த சாதனையும் ஆப்கானிஸ்தானே செய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை நான்கு தடவைகள், அயர்லாந்து அணியை ஐந்து முறை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஓமன் ஆகிய நாட்டு அணிகளை தலா ஒரு முறை வீழ்த்தி, அதிக ஆட்டங்களில் ஆட்டமிழக்காத சாதனையை சாதித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

Also Read | IND vs AUS 2020: SENA நாடுகளில் T20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் விராட் கோலி

இன்றைய போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றால், சர்வதேச T20 போட்டிகளில் தொடர்ந்து அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகளின் பட்டியலில் பாகிஸ்தான் நான்காவது இடத்திற்கு பின்னேறிவிடும். இந்தியா (India) தனது மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும். 

ஆனால் ஆஸ்திரேலிய அணி (Australia) வெற்றிப் பெற்றால் நிலைமை மாறிவிடும். எனவே, விராட் கோலி தலைமையில் இந்திய அணி மற்றுமொரு சாதனையை செய்வதற்கு இன்றைய வெற்றி உதவியாக இருக்கும் என்பதோடு, கடந்த 12 மாதங்களில் கோஹ்லி தலைமையிலான அணி தொடர்ந்து டி-20 போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறது.

019 டிசம்பரில் மும்பையில் வெஸ்ட் இண்டீஸ் (West Indies) அணிக்கு எதிரான வெற்றியுடன் தனது வெற்றிப்பயணத்தைத் தொடங்கிய இந்தியா,  2020 ஆம் ஆண்டில், இந்திய மண்ணில் இலங்கையுடன் (Srilanka) 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் குவஹாத்தியில் நடைபெறவிருந்தது. மழை காரணமாக முதல் போட்டி கைவிடப்பட்டது, இந்தூர் மற்றும் புனேவில் நடைபெற்ற மற்ற இரண்டு ஆட்டங்களையும் இந்தியா வென்று, 2-0 என்ற கணக்கில் இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றியது.  

Also Read | Ind vs Aus: T20 தொடரின் 2வது போட்டியில் இந்தியா வெற்றி

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நியூசிலாந்துக்கு (New Zealand) எதிரான டி 20 தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் வென்றது. இரண்டு ஆட்டங்கள் சூப்பர் ஓவரில் சென்றன. தற்போது ஆஸ்திரேலியாவில், நடந்து வரும் தொடரில், கோஹ்லி தலைமையிலான அணி இரண்டு வெற்றிகளை பெற்று தொடர்ந்து ஒன்பது டி-20 போட்டிகளில் வென்றுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தொடர் வெற்றி எண்ணிக்கை 10 ஆக உயரும்.

இந்தத் தொடர் இந்தியாவின் கையில் வந்துவிட்ட நிலையில், எதிர் வரவிருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்புக்கு இன்றைய வெற்றி உறுதுணையாய் இருக்கலாம்.  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News