சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியா போட்டி... குறைந்தபட்ச டிக்கெட் விலை தெரியுமா?

IND vs AUS Chennai Match Ticket Sales: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் நிலையில், அதன் டிக்கெட் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.   

Written by - Sudharsan G | Last Updated : Mar 9, 2023, 04:30 PM IST
  • வரும் மார்ச் 22ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.
  • அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
  • டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு.
சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியா போட்டி... குறைந்தபட்ச டிக்கெட் விலை தெரியுமா? title=

IND vs AUS Chennai Match Ticket Sales: நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரை விளையாட ஆஸ்திரேலியா அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. நாக்பூர், டெல்லி, இந்தூர் என முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது அகமதாபாத் நகரில் இன்று தொடங்கியது. 

மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் சர்வதேச போட்டிகள் நடப்பது குறைந்திருந்தது. இந்தாண்டுதான், ஐபிஎல் தொடர் இந்தியாவின் 12 நகரங்களில் நடைபெறகிறது. எனவே, ரசிகர்களும் போட்டியை நேரடியாக காண அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். டெஸ்ட் போட்டிகளை காணவே அதிக பார்வையாளர்கள் வரும் நிலையில், ஒருநாள் போட்டி, டி20 போட்டிகளை காண அதிகளவில் ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | IND vs AUS: 4வது டெஸ்ட் ட்ராவில் முடிந்தால் இந்தியா WTC பைனலுக்கு தகுதி பெறுமா?

அந்த வகையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னையில் முகாமிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியெடுத்து வரும் நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. 

சென்னை போட்டிக்கான டிக்கெட் அறிவிப்புக்கு பல நாள்களாக காத்திருந்த நிலையில், அதுகுறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. வரும் மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் நிலையில், போட்டியின் டிக்கெட் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை போட்டிக்கான டிக்கெட் ஆன்லைன், ஆஃப்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனில் வரும் மார்ச் 13ஆம் தேதி தொடங்கும் விற்பனை, Bookmyshow மற்றும் Paytm ஆஃப்பில் செய்யப்படுகிறது. மேலும், நேரில் எடுக்கப்படும் ஆஃப்லைன் டிக்கெட்டுகள் மார்ச் 18ஆம் தேதி நடக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் வரிசையில் நின்று டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்ளலாம். 

Ticket

C/D/E லோவர் பிரிவில், டிக்கெட் கவுண்டரில் வரும் மார்ச் 18ஆம் தேதி நடைபெறும் நிலையில், அதன் விலை ரூ. 1,200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமே கவுண்டரில் கொடுக்கப்படும். மற்ற அனைத்து பிரிவுகளின் டிக்கெட்டுகளும் ஆன்லைனில் மட்டும் கிடைக்கும். இதன் விற்பனை மார்ச் 13ஆம் தேதி தொடங்குகிறது. 

டிக்கெட் விலை

I/J/K லோவர் பிரிவு - ரூ. 3000

I/J/K அப்பர் பிரிவு - ரூ. 1,500

C/D/E A/C பாக்ஸ் - ரூ. 5 ஆயிரம்

I/J பாக்ஸ் - ரூ. 6 ஆயிரம்

G பாக்ஸ் - ரூ. 10 ஆயிரம் 

F/H பாக்ஸ் - ரூ. 8 ஆயிரம்

F லோவர் பாக்ஸ் - ரூ. 5 ஆயிரம்

மேலும் படிக்க | IND vs AUS: 'வருங்கால பிரதமர் ரோஹித்' ரசிகர்கள் குதூகலம்... நரேந்திர மோடி மைதானத்தில் சுவாரஸ்யம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News