IND vs ENG 3rd Test: உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் விளையாட்டு அரங்கமான நரேந்திர மோடி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா, மூன்றாவது நாளிலேயே, இங்கிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
இரண்டு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது போட்டியிலும் மூன்றாவது போட்டியிலும் இந்தியா வென்றுள்ளது.
Also Read | புஜாரா இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்ற அமித் ஷாவின் விருப்பம் டக் அவுட் ஆனது
இன்றைய இந்திய கிரிக்கெட் அணியின் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கபில் தேவ் , கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங்குக்கு அடுத்தபடியாக 400 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய நான்காவது இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 145 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் 81 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டம் இழந்தது. பின்னர் விளையாடிய இந்தியா வெற்றி பெற 49 ரன்கள் தேவை என்ற நிலையில், விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.
ALSO READ | IND vs ENG 3rd Test: இங்கிலாந்தே வெல்லும் என U-Turn எடுக்கும் மைக்கேல் வாகன்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR