India vs England Test series 2024: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வரும் ஜனவரி 25 முதல் தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாத சில நட்சத்திர வீரர்களும் உள்ளனர். அவர்களில் முதன்மையானவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த வருடம் ஷமி இந்திய அணிக்கு பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். உலக கோப்பையில் அவரின் சிறந்த பவுலிங்கிற்காக அர்ஜுனா விருது அவருக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், அவர் கடைசியாக 2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடினார், அதன் பிறகு இந்திய அணிக்காக ஒரு ஆட்டத்திலும் முகமது ஷமி விளையாடவில்லை.
மேலும் படிக்க | லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த விராட் கோலி! வைரலாகும் சிக்ஸர் வீடியோக்கள்
2023 உலகக் கோப்பையின் போது முகமது ஷமி தனது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் ஷமி தொடர்ந்து பந்து வீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலக கோப்பையின் போது இந்த காயத்திற்காக தற்காலிக சிகிச்சை எடுத்து கொண்டதாகவும், பின்னர் இந்த காயம் காரணமாக தற்போது ஓய்வு எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஷமி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பிடித்தார், பின்னர் காயத்தில் இருந்து குணமடையாததால் விலக்கப்பட்டார். இன்னும் காயத்தில் இருந்து குணமடையாததால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இருந்து ஷமி விலகியுள்ளார்.
தற்போது முகமது ஷமி பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருப்பதாகவும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மீண்டும் திரும்புவதை இலக்காகக் கொண்டிருப்பதாகவும் உறுதிப்படுத்தினார். எனவே, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து அவர் விடுபட்டாலும், தொடரின் மீதம் உள்ள மூன்று ஆட்டங்களுக்கு அவர் அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "எனது காயம் குணமடைந்து வருகிறது. என்சிஏவில் உள்ள மருத்துவ நிபுணர்கள் எனது முன்னேற்றத்தில் மகிழ்ச்சியடைந்துள்ளனர். என் கணுக்காலில் ஒரு சிறிய விறைப்பு உள்ளது, ஆனால் தற்போது நன்றாக இருக்கிறது. நான் எனது பயிற்சிகளை ஆரம்பித்துவிட்டேன், மேலும் இங்கிலாந்து தொடரில் விளையாட முடியும் என்று நம்புகிறேன். இந்த தொடரில் விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளேன்” என்று ஷமி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
BREAKING NEWS-
INDIAN SQUAD ANNOUNCED for 1st 2 TEST For Ind Vs Eng Series.#IndvsEng #IndiavsEngland #IndVEng #CricketTwitter pic.twitter.com/m0VhNLJk1j
— Shashank Yagnik (@YagnikShashank) January 12, 2024
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (C), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (WK), கேஎஸ் பாரத் (WK), துருவ் ஜூரல் (WK), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திரன் ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (WC), அவேஷ் கான்
மேலும் படிக்க | ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் பெறத் தகுதியற்றவர் - யுவராஜ் சிங் பேச்சு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ